ஆன்மிகத்தை ஆராயக்கூடாது கண் மூடி பின்பற்ற வேண்டும் என நம்பி மூடப்பழக்கங்களில் திகைத்திருந்த அறியாமை காலத்தில், அனைத்து மனிதர்களையும் நோக்கி ” சிந்திக்க மாட்டீர்களா ?” என கேள்வி எழுப்பியது இறைவனால் இறக்கி அருளப்பட்ட இறுதி வேதம் “திருக்குர்ஆன்”
சிந்திக்க மாட்டீர்களா? [அல்குர்ஆன் 37:155]
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? [அல்குர்ஆன் 4:82]
“குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக! [அல்குர்ஆன் 6:50]
படைப்பவன், படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா? [அல்குர்ஆன் 16:17]
“முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்” என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா? [அல்குர்ஆன் 19:67
அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் – அல் குர்ஆன் 4:82
இது (குர்ஆன்) மனித குலத்துக்குச் சென்றடைய வேண்டியதாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படவும், வணக்கத்திற்குரியவன் ஒரே ஒருவனே இருக்கிறான் என்பதை அவர்கள் அறிந்து கொள்வதற்காகவும், அறிவுடையோர் சிந்திப்பதற்காகவும் (இது அருளப்பட்டுள்ளது.) அல் குர்ஆன் 14:52
மேலும் திருக்குர்ஆன் மொழியாக்கத்தை படிக்க விரும்பினால் பதிவு செய்யவும் bit.ly/getquran
