சச்சார் அறிக்கைக்குப் பத்தாண்டுகளுக்குப் பின் இந்திய முஸ்லிம்களின் நிலை மாறியுள்ளதா?

சச்சார் அறிக்கை வெளியிடப்பட்ட இந்த பத்தாண்டுகளில் முஸ்லிம்களின் வாழ்க்கையில் என்ன மாதிரியான முன்னேற்றங்கள் அல்லது பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்பது பற்றி ஆங்காங்கு ஆய்வரங்குகள் நடத்தப்படுகின்றன. அறிஞர்கள் கருத்துரைத்துள்ளனர். இதழ்களில் கட்டுரைகள் வருகின்றன. தமிழகத்தில் இந்தத் திசையில் ஏதும் பெரிதாக நடவாது இருந்த நிலையில் ‘புதிய விடியல்’ இதழ் இது குறித்த சிறப்பிதழ் வெளியிடுவது வரவேற்கத் தக்கது. சச்சார் குழுவை அமைத்து முஸ்லிம்களின் நிலை குறித்த ஒரு முக்கியா ஆவணம் வெளிவரக் காரணமாக இருந்த ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி’ […]