சமுதாயச் செல்வம் விருது 2024

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றும் ஒரு திட்டமாக +2 தேர்வில் மாநில மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்த “ சமுதாய செல்வம் விருது “ வழங்கி பரிசளிக்கும் நிகழ்ச்சி ஜுன் 23 ஞாயிற்றுகிழமை மாலை திருச்சி மீனாட்சி மஹாலில் வைத்து அமைப்பின் தலைவர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல் அமர்வாக அமைப்பின் ஆலோசகர் ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “ மாறி வரும் […]

ymj சார்பாக சிறப்பாக நடந்த முடிந்த தாராபுரம் பொதுக்கூட்டம்!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 8-3-2009 அன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையில் YMJ சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதரஸா மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகளோடு பொதுக்கூட்டம் ஆரம்பமானது. பின்னர் சஹாபிய பெண்களின் வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பில் YMJவின் அமைப்புச் செயலாளர் சகோ.திருப்பூர் அப்துல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். இறுதியாக உலகம் போற்றும் உன்னத தூதர்! என்ற தலைப்பில் YMJவின் அமைப்புத் தலைவர் சகோ.P.M.அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.

பிறை அறிவிப்பு ரஜப் மாதம் ஆரம்பம்

பிறைதேட வேண்டிய நாளான 07-03-19 வியாழக் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகத்தில் எந்த பகுதியிலும் பிறை தென்படவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபி மொழியின் அடிப்படையில் ஜமாதுல் ஆஹிர் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து 08-03-19. வெள்ளிக்கிழமை மஹ்ரிபிலிருந்து ரஜப்மாதம் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு, பிறைக்குழு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்.YMJ. 9443524550. 8098194612. 7338877001.

நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவசர செயற்குழு – சுற்றரிக்கை 004 – 2019

YMJ சுற்றறிக்கை 004-2019நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவசர மாநில செயற்குழு சம்பந்தமாக ———————————————————-அன்புள்ள நிர்வாகிகள் / பிரச்சாரகர்களுக்கு…. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் பிரமுகர்களும் நம்மை சந்திக்க விருப்பம் தெரிவித்தும், ஆதரவு கோரியும் வருகின்றனர். ஜமாத்தின் முதல் பொதுக்குழுவில் அறிவித்தபடி தேர்தல் நிலைபாட்டை மாநில செயற்குழு தான் முடிவு செய்யும் என்பதால் இது வரை யாருக்கும் ஆதரவு நிலைப்பாட்டை தலைமை அறிவிக்கவில்லை. 2019 நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து முடிவு செய்ய […]

தாருஸ்ஸலாம் தாவா செண்டர் கட்டுமான பணிகள்

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தாருஸ்ஸலாம் தாவா சென்டரின் கட்டுமான பணிகளை தலைமை நிர்வாகிகள் இன்று (3-3-2019) பார்வையிட்டனர்.

குமரி YMJ மாவட்ட தலைமையில் அமமுக நிர்வாகிகள் சந்திப்பு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் குமரி மாவட்டம்தலைமை அலுவலகத்தில்இன்று(3-3-19) காலை அம்மா மக்கள் முன்னேற்ற கழக கன்னியாகுமரி பாரளுமன்ற வேட்பாளர்லஷ்மணன் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வருகை தந்து வருகின்ற தேர்தலுக்கு ஆதரவு கோரினர். இச்சந்திப்பின் போது அமைப்புச் செயலாளர் சகோ. நிசார் கபீர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.நமது ஜமாஅத் தேர்தல் நிலைப்பாடு பற்றி விரைவில் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது

மத்திய அரசில் 12 ஆயிரம் காலிப் பணியிடங்கள்!

மத்திய அரசில் பணியாற்ற வேண்டுமா? 12 ஆயிரம் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! மத்திய அரசிற்கு உட்பட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 12 ஆயிரம் பணியிடங்கள் அறிவிப்பப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-நேரு யுவகேந்திராவில் […]

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் தகுதித்தேர்வு அறிவிப்பு

மத்திய அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் (சி.எஸ்.ஐ.ஆர்.) நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வுக்கான (நெட்) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்விற்கான தேதி அறிவிப்பு!சி.எஸ்.ஐ.ஆர் நெட் தேர்விற்கான தேதி அறிவிப்பு! மத்திய அரசின் ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்குத் தகுதி பெறவும், கல்லூரி, பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி பெறவும் நெட் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இதில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளை உள்ளடக்கிய 70-க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கான நெட் தேர்வினை தற்போது […]