ymj சார்பாக சிறப்பாக நடந்த முடிந்த தாராபுரம் பொதுக்கூட்டம்!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 8-3-2009 அன்று திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையில் YMJ சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதரஸா மாணவர்களின் பல்சுவை நிகழ்ச்சிகளோடு பொதுக்கூட்டம் ஆரம்பமானது. பின்னர் சஹாபிய பெண்களின் வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பில் YMJவின் அமைப்புச் செயலாளர் சகோ.திருப்பூர் அப்துல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். இறுதியாக உலகம் போற்றும் உன்னத தூதர்! என்ற தலைப்பில் YMJவின் அமைப்புத் தலைவர் சகோ.P.M.அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.
தாருஸ்ஸலாம் தாவா செண்டர் கட்டுமான பணிகள்

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள தாருஸ்ஸலாம் தாவா சென்டரின் கட்டுமான பணிகளை தலைமை நிர்வாகிகள் இன்று (3-3-2019) பார்வையிட்டனர்.
YMJ கோவை மாவட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கோவை மாவட்ட நிர்வாகக்குழு இன்று 17-02-2019 மதியம் 1.00 மணியளவில் நடைபெற்றது. இதில் காஷ்மீர் தாக்குதலை கண்டித்தும் , இரணுவ வீரர்களின் உயிரை பாதுகாக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது மாநிலத்தலைவர் சகோ. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கோவையில் YMJ சார்பாக 150 நபர்களுக்கு இலவச உணவு விநியோகம்

இஸ்லாத்தில் சிறந்தது எது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டதற்க்கு, “பசித்தோருக்கு உணவளிப்பதாகும்” என்று பதிலளித்தார்கள். ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) கோவை மாவட்டம் சார்பாக “பசித்தோர்க்கு உணவளிப்போம்” எனும் தொடர் சேவையில் 14 வது வாரமான இன்று (09.02.19) ஏழைகளை தேடிச்சென்று மொத்தம் 150 நபர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! இந்த சேவை தொய்வின்றி தொடர உணவாகவோ அல்லது பொருளாதாரமாகவோ வழங்க விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: +91 63840-23100 […]
YMJ பூந்தமல்லி கிளை சார்பாக இலவச உணவும் போர்வைகளும் வழங்கும் பணி

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி கிளையின் சார்பாக இறை அருளால் வாரவாரம் ஏழை வறியவர்களுக்கு இலவச உணவும், போர்வைகளும் வழங்கப்பட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இன்று (09.02.19)… நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு இலவச பிரியாணி பொட்டலங்களும், சாலையோரம் உறங்கும் மக்களுக்கு 50 இலவச போர்வைகளும் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! இதற்காக உதவி செய்த சகோதரர்களுக்கு துஆ செய்யுமாறும், மேலும் இப்பணி தொடர்ந்து நடக்க தங்களாலான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். தொடர்புக்கு: 9941687863, 9962832223, 9841235966.
தேனி மாவட்டம் YMJ சார்பாக ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கும் பணி

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் தேனி மாவட்டம் சார்பாக நடைபெறும் பணிகளில் ஒன்றாக ‘உணவு வழங்கும் திட்டம்’ மேற்கொள்ளப்பட்டு அது நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது. அப்பணியின் மூன்றாம் கட்டமாக இன்று (09.02.19) தேனியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் அனைவருக்கும் சுவையான சிக்கன் பிரியாணி சமைத்து பரிமாறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்! இப்பணிக்கு ஒரு சகோதரர் முழு செலவினை ஏற்றுக்கொண்டார். அவருக்காக துஆ செய்யுமாறும், மேலும் இப்பணி தொடர உங்களாலான பொருளாதார உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். ‘அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், […]
அறந்தாங்கியில் மழலையர்களுக்கான மதரஸா ஆரம்பம்

இன்ஷா அல்லாஹ் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக அறந்தாங்கியில் மழலையர்களுக்கான மதரஸத்துல் அல் முஃமின் (மக்தப் மதரஸா) எதிர்வருகின்ற 11/02/2019 திங்கள்கிழமையில் இருந்து ஆரம்பமாக உள்ளது. நேரம் மாலை 5மணியிலிருந்து ஆறு மணிவரை இடம்: அப்துல் ஹமீது தெரு, பழைய டைமண்ட் ஸ்கூல் எதிரில் பாடத்திட்டம்: 1)குர்ஆன் சரளமாக ஓதுதல் 2) து ஆக்கள் மனனம் 3) தொழுகை பயிர்ச்சி 4) இஸ்லாமிய ஒழுக்கங்கள் 5) சூரா மனனம் 6)நபி வழிச்சட்டங்கள். யார் கல்வியைத் […]
YMJ சோழபுரம் கிளை மரக்கன்றுகள் நடும்பணி
YMJவின் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் மற்றும் புதிய ஜுமுஆ ஆரம்பம்…

இறைவனின் மாபெரும் கிருபையினால் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் மற்றும் ஜூம்ஆ பள்ளிவாசல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது! இடம்: 53/2, அப்துல்ஹமீது தெரு,பழைய டைமண்ட் ஸ்கூல் எதிரில், அறந்தாங்கி அதேபோன்று இந்த கட்டிடத்தில் விரைவாக ஜூம்ஆ நடத்துவதற்கு மெகாபோன், மைக் ஸ்டாண்ட், பாய், ஸ்கிரீன், ஃபேன், லைட் என பல்வேறு அவசியமான பொருட்கள் வாங்குவதற்கு பொருளாதாரம் தோராயமாக 30,000 தேவைபடுகிறது. உங்களால் இயன்றளவில் பொருளாகவோ, பணமாகவோ கொடுத்து உதவினால் நாம் விரைவாக ஜூம்ஆ நடத்துவதற்கு உதவியாக இருக்கும். […]
YMJவின் சோழபுரம் கிளையில் இரத்ததான முகாம்

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சோழபுரம் கிளையில் இரத்த தான முகாம் 26.01.2019 இன்று இனிதே துவங்கியது! அல்ஹம்துலில்லாஹ்! இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சாக்கோட்டை க. அன்பழகன் MLA, ரிச்சர்ட் செல்வகுமார்(சிறப்பு துணை காவல் ஆய்வாளர்), மேலப்பள்ளி நாட்டாண்மை, கீழப்பள்ளி நாட்டாண்மை கலந்து கொண்டனர். துவக்கவுரையாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில து.பொதுச்செயலாளர் சகோ.இமாம் அலி அவர்கள் நிகழ்த்தினார்கள். ரோட்டரி ரத்த வங்கி மேலாளர் சகோ.கபூர் அவர்கள் இரத்த தான கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். […]