பாசிச ஆதிக்க சக்திகளுக்கு எதிரான முழக்கம் – அல்லாஹு அக்பர்

ஒரு பெண் தனது முகம், முன்கை, பாதம் தவிர ஏனைய பாகங்களை அன்னிய ஆண்களுக்கு முன் மறைத்துக் கொள்வது ஹிஜாப் என்றழைக்கப்படுகிறது. குர்ஆன் இதை வலியுறுத்துகிறது.பெண்களைத் தீங்கிலிருந்து காப்பதும், அவர்களின் கண்ணியத்தை நிலைநாட்டுவதுமே இச்சட்டத்தின் நோக்கமென குர்ஆன்(33:59, 24:31) கூறுகிறது.ஒட்டுமொத்த பெண்களின் உரிமையாகவும் பெருமையாகவும் கொண்டாடப்பட வேண்டிய ஓர்ஆடை, முஸ்லிம் பெண்களின் ஆடையாகவும் அவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட உரிமையாகவும் சுருக்கப்பட்டிருப்பதே பெண் இனத்திற்கு எதிரான பெரும் அரசியல் சதியாகும்.ஏனெனில் இஸ்லாம் மட்டுமல்ல இந்து, கிறிஸ்தவ வேதங்களும் இதையே […]

என் பார்வையில் முஹம்மது நபி (ஸல்) கட்டுரைப் போட்டியில் கலந்துக் கொண்டோர்

கடந்த பிப்ரவரி மாதத்தில் நம் உயிரினும் மேலான உத்தம நபி முஹம்மது ஸல் அவர்களையும் முஸ்லிம்களின் அன்னையர்களான தூதரின் மனைவிமார்களையும் மிகவும் கீழ்தரமாக விமர்சித்து ஃபாசிச ஹிந்துத்துவ வெறியன் பேசி அமைதியாக வாழும் சமூகங்களிடைய வெறுப்பை விதைத்து அரசியல் லாபத்தை அடைய முயற்சித்ததை நாம் அனைவரும் அறிவோம். இப்பேச்சு தமிழக முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதோடு தமிழகம் முழுக்க ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு கயவன் அன்றைய இரவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.இச்சமயத்தில் நாம் முஹம்மது நபிகள் […]

ஆயத்துல் குர்ஸி

திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயம் 255ம் கீழ்கண்ட வசனம் ஆயத்துல் குர்ஸி என அழைக்கப்படுகிறது. இவ்வசனத்தில் அல்லாஹ்வுடைய பல்வேறு பண்புகளை நாம் அறியலாம் அல்லாஹு லாயிலாஹ இல்லா ஹுவல் ஹய்யுல் கய்யூம். லா தஃகுதுஹு ஸின(த்)துன் வலா நவ்முன், லஹு மா ஃபிஸ்ஸமாவா(த்)தி வமாஃபில் அர்ளி, மன் தல்லதீ யஷ்ஃபவு இந்தஹு இல்லாபி இத்னிஹி, யஃலமு மாபைன ஐதீஹிம் வமா ஃகல்பஹும் வலாயுஹீ(த்)தூன பிஷையின் மின் இல்மிஹி இல்லா பிமா ஷாஅ, வஸிஅ குர்ஸிய்யுஹுஸ் ஸமாவாத்தி வல்அர்ள […]

பசியில்லா உலகம் இஸ்லாமே தீர்வு

பசியுடன் படுக்கைக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சொல்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளி விபரம். தினமும் 69 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் படுக்கைக்கு செல்லும் போது உணவில்லாமல் பசியுடன் உறங்க செல்கின்றனர்.பசியை போக்க உலக நாடுகள் பல்வேறு திட்டங்களை திட்டினாலும் அதை நடைமுறைப்படுத்தி வெற்றி பெற இயலவில்லை. இதை விட கொடுமையான வறுமை 1400 ஆண்டுகளுக்கு முன் நபிகளார் வாழ்ந்த அரபுலகில் இருந்தது இவ்வறுமையை ஒழிக்க இஸ்லாம் பல்வேறு போதனைகளை உலகிற்கு முன்வைக்கிறது. […]

அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் யார் ?

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும்,வானவர்களையும், வேதங்களையும்,நபிமார்களையும் நம்புவோரும் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கும் (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும் தொழுகையை நிலைநாட்டுவோரும்,ஸகாத்தை வழங்குவோரும்,வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும்போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள்.அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள். [அல்குர்ஆன் 2:177]

அல்லாஹ் விரும்புகிறான்

அல்லாஹ் தன்னை நேசிக்க வேண்டும் என ஒவ்வொரு முஸ்லிமும் ஆசைபடுவது இயல்பானது. அல்லாஹ் தன்னை நேசிக்க வேண்டுமெனில் நம்மிடம் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி அல்லாஹ் திருமறையில் பல்வேறு வசனங்களில் அப்பண்புகளை பட்டியலிடுகிறான்அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான். [அல்குர்ஆன் 2:195]அவ்வாறில்லை! யார் தமது வாக்குறுதியை நிறைவேற்றி (இறைவனை) அஞ்சுகிறாரோ, அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோரை விரும்புகிறான். அல்குர்ஆன் 3:76திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான் தூய்மையாக […]

மனித படைப்பின் அதிசியம்

20 ம் நூற்றாண்டின் மருத்துவ உலகம் நவீன கருவிகளின் உதவியோடு ஆராய்ந்து அறிந்த அறிவியல் உண்மையை, இருண்ட காலம் என கருதப்பட்ட 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ்வின் அருள்மறை வசனம் மனித படைப்பின் அதிசயத்தை சிந்திக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பியது.குரங்கிலிருந்து மனித பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்ற தவறான தத்துவத்தையும் பொய்பித்து மனிதக் கருவின் தோற்றத்தப் பற்றியும் அதன் வளர்ச்சி நிலைகள் பற்றியும் துல்லியமான அறிவியல் உண்மைகளை உரக்க சொன்னது முதல் நூல் குர்ஆன் மட்டுமே […]

சிந்திக்க தூண்டும் வேதம் -1

ஆன்மிகத்தை ஆராயக்கூடாது கண் மூடி பின்பற்ற வேண்டும் என நம்பி மூடப்பழக்கங்களில் திகைத்திருந்த அறியாமை காலத்தில், அனைத்து மனிதர்களையும் நோக்கி ” சிந்திக்க மாட்டீர்களா ?” என கேள்வி எழுப்பியது இறைவனால் இறக்கி அருளப்பட்ட இறுதி வேதம் “திருக்குர்ஆன்”சிந்திக்க மாட்டீர்களா? [அல்குர்ஆன் 37:155]அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? [அல்குர்ஆன் 4:82]“குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?” என்று கேட்பீராக! [அல்குர்ஆன் 6:50] படைப்பவன், படைக்காதவனைப் போன்றவனா? சிந்திக்க மாட்டீர்களா? [அல்குர்ஆன் 16:17] “முன்னர் எந்தப் பொருளாகவும் […]

மனிதனுடைய தன்மைகள்

மனிதனுடைய தன்மைகளை பற்றி அல்லாஹ் குர் ஆனில் கூறும் சில வசனங்கள் அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.[அல்குர்ஆன் 4:28] நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்.[அல்குர்ஆன் 14:34] நன்மைக்காகப் பிரார்த்திப்பது போலவே தீமைக்காகவும் மனிதன் பிரார்த்தனை செய்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான். [அல்குர்ஆன் 17:11] என் இறைவனது அருளின் கருவூலங்களுக்கு […]

பெருநாள் தினத்தில்

ஃபித்ரா தர்மம் முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.[அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி 1503]பெருநாள் தொழுகை நேரம் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் […]