20 ம் நூற்றாண்டின் மருத்துவ உலகம் நவீன கருவிகளின் உதவியோடு ஆராய்ந்து அறிந்த அறிவியல் உண்மையை, இருண்ட காலம் என கருதப்பட்ட 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ்வின் அருள்மறை வசனம் மனித படைப்பின் அதிசயத்தை சிந்திக்க மாட்டீர்களா என கேள்வி எழுப்பியது.
குரங்கிலிருந்து மனித பரிணாம வளர்ச்சி அடைந்தான் என்ற தவறான தத்துவத்தையும் பொய்பித்து மனிதக் கருவின் தோற்றத்தப் பற்றியும் அதன் வளர்ச்சி நிலைகள் பற்றியும் துல்லியமான அறிவியல் உண்மைகளை உரக்க சொன்னது முதல் நூல் குர்ஆன் மட்டுமே
“முன்னர் எந்தப் பொருளாகவும் இல்லாதிருந்த நிலையில் அவனைப் படைத்தோம்” என்பதை மனிதன் சிந்திக்க வேண்டாமா? [அல்குர்ஆன் 19:67]
மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். [அல்குர்ஆன் 86:5]
களிமண்ணின் சத்திலிருந்து மனிதனைப் படைத்தோம் பின்னர் அவனைப் பாதுகாப்பான இடத்தில் விந்துத் துளியாக ஆக்கினோம். பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத்துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான். [அல்குர்ஆன் 23: 11-14]
இது போன்ற பல்வேறு அறிவியல் உண்மைகள் திருக்குர்ஆனில் பரவிகிடக்கிறது இதை சிந்திக்க மாட்டீர்களா ? சிந்திப்பவர்களுக்குப் பல அத்தாட்சிகள் உள்ளன என சுய பிரகடணம் செய்கிறது திருக்குர்ஆன்
மாற்று மத சகோதர்கள் இஸ்லாத்தை பற்றி மேலும் அறிய திருக்குர்ஆன் படிக்க விரும்புவோர் அல்லது இஸ்லாத்தை பற்றிய உங்கள் சந்தேகங்கள் பதிவு செய்ய bit.ly/getquran
