
அல்லாஹ்வின் திருப்பெயரால்…ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் தலைமை நிர்வாகக்குழு கூட்டம் திருச்சியிலுள்ள அமைப்பு தலைமையகத்தில் இன்று, 14/03/2021 நடைபெற்றது.அமைப்பு தலைவர் P.M. அல்தாஃபி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொதுச்செயலாளர், பொருளாளர், மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்துகொன்டனர்.இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: வேளாண் சட்ட திருத்தம், குடியுரிமை சட்ட திருத்தம், GST, பண மதிப்பிழப்பு, பெட்ரோல், டீசல், கேஸ் விலையுர்வு, நீட் தேர்வு , விலைவாசி உயர்வு போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து அடிமை சேவகம் செய்து வருகிறது அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு. அத்தோடு, மக்கள் மத்தியில் மத ரீதியாக பிளவுபடுத்தி இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள அண்ணா திராவிட முன்னேற்ற கழக அரசு வீழ்த்தப்பட வேண்டும். ஜனநாயகத்தை , இந்திய இறையாண்மையையும் பாதுகாக்க போராடி வரும் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்த திராவிட முன்னேற்ற கழக கூட்டணியை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் ஆதரவு அளிக்கிறது என முடிவு செய்யபடுகிறது.