மத்திய பா ஜ க அரசு பதவியெறதிலிருந்து முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் வன்முறைகள் நாடெங்கும் அதிகரித்துள்ள சூழலில் இன்னும் முஸ்லிம்களை சட்ட ரீதியாக ஒடுக்க பல சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது
முஸ்லிம்கள் மற்றும் எதிர்கட்சியினரின் கடும் எதிர்ப்பையும் மீறி முத்தலாக் தடை சட்டத்தை நேற்றைய தினம் மாநிலங்களவையில் பா ஜ க அரசு நிறைவேற்றியுள்ளது. ஒரே தடவையில் மூன்று முறை தலாக் கூறி. விவாகரத்து செய்யும் நடைமுறை இஸ்லாமிய சரியத் சட்டத்திற்க்கு எதிரானது என்றாலும் இது ஒர் சிவில் பிரச்சனை; ஆனால் இது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு . முத்தலாக் மூலம் விவாவகரத்து செய்தால் கணவருக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்க வழி செய்யும் இச் சட்டம் முஸ்லிம் இளைஞர்களை குறி வைத்து சிறையில் தள்ள மேற்கொள்ளும் சதியாகவே ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கருதுகின்றது. இச்சட்டத்தால் குடும்பங்களுக்குள் குழப்பம் மிஞ்சுமே தவிர பெண்கள் பாதுக்காக்கப்பட மாட்டார்கள் ; அதே போல் முஸ்லீம் பெண்கள் மீது நீலிக்கண்ணீர் வடிக்கும் மோடியின் அரசு மற்ற சமுதாய பெண்கள் மீது அக்கறை கொள்ளாதது மூலம் இதிலுள்ள சூழ்ச்சியை அறிய முடிகிறது. ஜனநாயகம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரான இச்சட்டத்தை முஸ்லிம்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள்.
தேசிய புலணாய்வு முகமை சட்ட திருத்தம் மாநில உரிமைகளை பரித்து சிறுபான்மை மற்றும் சமூக ஆர்வலர்களை ஒடுக்க எடுக்கப்பட்டுள்ள சட்ட திருத்தமாகவே ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கருதுகிறது;
ஏற்கனவே உள்ள சட்டத்தின் படியே அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் வேலையை என் ஐ ஏ தொடர்ந்து செய்து வருகிறது. கடந்த சில நாட்களாக முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக உள்ள இடங்களில் சோதனை என்ற பெயரில் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் இந்துத்துவ சக்திகள் ஈடுபட்ட தீவிரவாத செயல்களை எந்த ஒர் விசாரனையும் இல்லாமல் அது தொடர்பான வழக்குகளை கையாள்வதில் திறனற்று இருக்கிறது. இது போன்ற ஒரு தலைப்பட்ச முகமைக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது ஜனநாயகத்திற்கும் ஒட்டு மொத்த தேசத்திற்க்குஅம் ஒர் அச்சுறுத்தலாகவே ஏகத்துவ முஸ் லிம் ஜமாஅத் கருதுகிறது. அதேபோல் இச்சட்ட திருத்தங்களின் போது எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு என்ற பெயரில் மறைமுக ஆதரவு வழங்கும் மதசார்ப்பற்ற அரசியல் கட்சிகளையும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டிக்கிறது.
இப்படிக்கு
ஐ ஷேக்
மாவட்டத் தலைவர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
திருச்சி மாவட்டம்

