இவ்வுலகில் வாழும் மனிதர்களாகிய நம்மிடம் கோபம், அன்பு, பொறாமை, ஆசை என ஏராளமான இயல்பு பண்புகள் உள்ளன…!!
அவைகளில் ஒன்றான வெட்கமே !! இந்த ஆக்கத்தில் விவரிக்க இருக்கும் பண்பு…!!
அன்பு என்பது எல்லாரிடத்திலும் இருக்கக்கூடிய எல்லோர் மீதும் நிலவக்கூடிய பண்பு…!!
இருப்பினும், அனைவருக்காகவும் இரத்தம் சிந்தி உழைப்பவர்களிடத்திலும் அது இருக்கும்…!!
அனைவரது இரத்தங்களையும் சிந்த வைப்பதற்காக உழைப்பவர்களிடத்திலும் அது இருக்கும்…!!
ஆனால் வெட்கமோ அவ்வாறல்ல…!!
அது எல்லோரிடத்திலும் இருந்திடாது…!!
இந்த ஆக்கத்தில் கூறப்படுவது தமது திறமைகளை வெளிக்கொண்டுவர தயக்கம் கொள்ளும் வெட்கத்தைப் பற்றி அல்ல…
மாறாக தவறு செய்தால் ஏற்படும் அசிங்கத்தையும், அவமானத்தையும் நினைத்து அஞ்சுவதும் மற்றும் அக்காரணத்தால் தவறிழைக்காமல் தம்மை தாமே காத்துக்கொள்ளும் ஒரு பண்பான வெட்கத்தை பற்றியது…!!!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கை (ஈமான்) அறுபதுக்கும் அதிமான கிளைகளைக் கொண்டதாகும். வெட்கமும் (நாணமும்) இறைநம்பிக்கையின் ஒரு கிளையே.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல்: புகாரி 9
இறைநம்பிக்கையின் கிளைகளில் ஒன்று வெட்கம் என நபி (ஸல்) அவர்கள் மிகத்தெளிவாக எடுத்துரைத்து இருக்கிறார்கள்…!!
வெட்கமும், ஈமானும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டது அல்ல…
என்பதை கீழுள்ள நபிமொழி விளக்குகிறது…!!!
عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ” الْحَيَاءُ وَالإِيمَانُ قُرِنَا جَمِيعًا ، فَإِذَا رُفِعَ أَحَدُهُمَا رُفِعَ الآخَرُ “
هَذَا حَدِيثٌ صَحِيحٌ
வெட்கம் மற்றும் ஈமான் இவை இரண்டு முற்றிலும் இணைக்கப்பட்டவையாகும். அவ்விரண்டில் ஒன்று உயர்த்தப்பட்டு விட்டால் மற்றதும் உயர்ந்து விடும்.என்று நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஹாகிம் ( 56 ) தரம் : ஸஹீஹ்
மேலும், வெட்கத்தின் முக்கியத்துவத்தை பேசாத, அப்பண்பு இல்லாதவர்களை எச்சரிக்காத நபிமார்களே இல்லை என்பதை கீழ்கண்ட நபிமொழி விளக்குகிறது…!!!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்றுதான், “நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்துகொள்” என்பதும்.
அறி: அபூ மஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ரலி),
நூல்: புகாரி 3483,3484,6120
இன்றைக்கு சமூக வலைதளங்களில் சமூக சீர்கேடுகள் அரங்கேறுவதற்கு அடிப்படையான காரணம் வெட்கம் எனும் இன்றியமையாத பண்பு இல்லாமல் இருப்பது தான்…!!!
இன்றைக்கு நாம் வாழும் பகுதிகளில் நடக்கும் அனைத்து பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களுக்கும் காரணம் ஆண்களின் மிருகத்தனமான எண்ணங்களாக இருப்பினும் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் அமையும் பெண்களின் வெட்கமற்ற ஆடை முறையும் தான்…!!
ஆடை அணிந்தும் நிர்வாணம் என்று சொல்லும் அளவிற்கு தங்களது அங்க அபயங்களை அந்நியனுக்கு காட்டும் வகையில் ஆடை அணிந்து செல்பவர்களுக்கு “வெட்கம் துளியளவும், ஈமான் எள்ளளவும் இல்லை” என்று சொல்வதற்கு எந்தவித தயக்கமும் காட்ட வேண்டிய தேவை இல்லை…!!!
இந்த ரமலான் மாதம் நன்மைகளை அள்ளிக்கொள்ளவும், செய்த பாவங்களுக்கு பரிகாரமாக பாவமன்னிப்பு கேட்கவும் ஒரு சிறந்த வாய்ப்பு…!!!
இறைநம்பிக்கையில் மிகைத்து வாழ பயிற்சியளித்து வழிவகுக்கும் இம்மாதத்தில் இறைநம்பிக்கையின் ஒரு கிளையான வெட்கத்தை வேண்டி ஏக இறைவனிடத்தில் பிரார்த்திப்போம்…!!!
வெட்கக்கேடானதை விட்டு விலகியிருக்க முயற்சிப்போம்…!!!
அதற்காக மட்டுமே நமது துஆக்களை அதிக அதிகமாக முற்படுத்துவோம்…!!!
என்றும் இறைப்பணியில்,
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
நாகை மாணவர் குழு