மனிதனாக பிறந்து பின் மரணிக்க இருக்கும் நாம், ஒருவருக்கு ஒருவர் வேலிகளாக இருந்து உதவிபுரிந்து வாழ வேண்டிய காலக்கட்டத்தில், ஒருவருக்கு ஒருவர் கேலி செய்து புறம்பேசி வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்…!!!
இந்த கேலி கிண்டல்களும், புறங்களும் எல்லோருக்கும் எதார்த்த சிந்தனைகளாக இருக்கலாம்…!!
ஆனால் இஸ்லாம் இதை ஒரு பாவமான காரியமாகவும், கண்டிக்கக்குடிய விசயமாகவுமே பார்க்கிறது…!!!
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا يَسْخَرْ قَومٌ مِنْ قَوْمٍ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ وَلَا تَلْمِزُوا أَنفُسَكُمْ وَلَا تَنَابَزُوا بِالْأَلْقَابِ بِئْسَ الاِسْمُ الْفُسُوقُ بَعْدَ الْإِيمَانِ وَمَنْ لَمْ يَتُبْ فَأُوْلَئِكَ هُمْ الظَّالِمُونَ(11) سورة الحجرات
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்யவேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது), கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.
அல்குர்ஆன் 49:11
நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள் தங்களுக்கிடையே கேலி செய்து கொள்வதோ கேலி செய்யும் வகையில் பட்டப்பெயர்கள் சூட்டிக் கொள்வதோ மிகப்பெரிய பாவம் என இந்த திருமறை வசனம் எடுத்துரைக்கிறது…!!
الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنْ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُونَ مِنْهُمْ سَخِرَ اللَّهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ(79) سورة التوبة
தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண்டோரையும், தமது உழைப் பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதோரையும் அவர்கள் குறை கூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
(அல்குர்ஆன் 9:79)
நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களை கேலி செய்கிற எந்த ஒருவருக்கும் துன்புறுத்தும் வேதனையுண்டு என்பதை மேற்கண்ட வசனம் விளக்குகிறது…!!
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْغِيبَةُ قَالُوا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ ذِكْرُكَ أَخَاكَ بِمَا يَكْرَهُ قِيلَ أَفَرَأَيْتَ إِنْ كَانَ فِي أَخِي مَا أَقُولُ قَالَ إِنْ كَانَ فِيهِ مَا تَقُولُ فَقَدْ اغْتَبْتَهُ وَإِنْ لَمْ يَكُنْ فِيهِ فَقَدْ بَهَتَّهُ رواه مسلم
புறம் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் அறிந்தவர்கள் என்று (நபித் தோழர்கள்) கூறினர். உன் சகோதரன் பற்றி அவன் வெறுப்பதை நீர் கூறுவதாகும். நான் சொல்வது என் சகோதரனிடம் இருந்தால்…? என்று கேட்க்கப்பட்டது. நீர் கூறியது அவனிடம் இருந்தால் நீ புறம் பேசிவிட்டாய். அவனிடம் (அந்த குறை) இல்லையென்றால் நீ அவதூறு கூறிவிட்டாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : முஸ்லிம் (4690)
வீண்ப்பேச்சுகளில் ஒன்றான இந்த பயனற்ற புறம் மற்றும் கேலி கிண்டல்களை நாம் பாளாக்கிக் கொள்ளக் கூடாது…!!
மேலும் இதுபோன்ற கேலி கிண்டல்களின் மூலம் யாரை கேலி செய்கிறோமோ அவர்கள் மீது அவர்களுக்கே ஓர் தாழ்வுமனப்பான்மையை உண்டாக்கி வெளிப்படுத்த முடியாத நோயாக அதை அவர்களுக்கு மாற்றிவிடுகிறோம்…!!!
அதேசமயம் பிறர் மீதான வெறுப்பு, கோபம், கால்ப்புணர்ச்சியின் காரணமாக அவர்களை பற்றி பிறரிடம் தவறாக பேசி திரிகிறோம்…!!
இதை பெருமளவில் கண்டிக்கும்படியாக இறைவன் ஓர் சிறிய அத்தியாயத்தையே இறக்கியுள்ளான்…!!!
அல் ஹுமஸா – புறம் பேசுதல்
وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ
1.குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான்.
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ
2.அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான்.
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ
3.தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான்.
كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ
4.அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான்.
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ
5.ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்?
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ
6.மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு.
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ
7.அது உள்ளங்களைச் சென்றடையும்.
إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ
فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ
8,9.நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.
அல்குர்ஆன் 104:1-9
எனவே புறம் பேசுபவர்களுக்காகவே உண்டாக்கப்பட்ட ஹூதமாவில் இருந்து இறைவனிடத்தில் பாதுகாப்பு பெறுவோம்…!!
நல்லவற்றுக்காக மட்டும் நாவுகளை பயன்படுத்துவோம்…!!!