கவலையை கைவிடுங்கள்…!!!

ஏக இறைவனின் திருப்பெயரால் துவங்குகின்றேன்…!!

நம் எண்ணங்களை அதிகம் பேச்சு கள் மற்றும் செயல்களின் மூலம்தான் வெளிப்படுத்துகிறோம்…

அதனடிப்படையில் பிறர் நம்முடைய எண்ணங்களை அறிந்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாக நம் உணர்வுகளும் உடல் செய்கைகளும் அமைந்துள்ளன…

நம்முடைய கடந்த காலங்களை சற்று சிந்தித்து பார்த்தால், உடல் செய்கை பற்றி அறிய முடியும்…

இன்றும் நம் வாய் திறந்து பேசினாலும் சில நேரங்களில் உங்கள் உடல் செய்கை கொண்டு இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளுவர்கள். உடல் செய்கையும் உணர்வுகளும் ஒன்றோடு ஒன்று இணைந்தது தான்…

உதாரணத்திற்கு இன்பமான, மகிழ்ச்சியான உணர்வை வெளிபடுத்த புன்னகை.

கவலை மற்றும் சோகமான உணர்வுகளை வெளிபடுத்த அழுகை- கண்ணீர்..

இப்படி பல உணர்வுகள் மனிதர்களிடம் உண்டு.

நாம் இங்கு இந்த கட்டுரையில் கவலை பற்றியே பார்க்க இருக்கிறோம்.

“கவலை இல்லா மனிதர்கள் இல்லை”..!! என்று கூறுவார்கள். ஆம்!,
உண்மை தான்..!!
அந்த கவலை வரும் நேரங்களில் நம் எவ்வாறு அனுக வேண்டும்? அதிலிருத்து எவ்வாறு மீள வேண்டும்? என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும்.

கவலைகள் என்பது நிச்சயம் ஓர் எதிர் மறை சிந்தனை தான்…!!
நாம் கவலையில் இருந்தால் நம் நேர் மறை சிந்தனைகள் மாறி விடும்..!! தாழ்வான எண்ணங்கள் உருவாகி விடும்…!!
அது நம்மை இன்னும் அழிவின் பாதாளத்திற்கே அழைத்து சென்று விடும்…!!
ஆக கவலை கைவிடுவதே சிறந்த யுக்தி..!!

நம் கவலைக் கொள்ளும் பொழுது ஏன் கவலை படுகிறோம்?
எதற்கு கவலை படுகிறோம்?
நம் கவலையால் என்ன லாபம்?? என்று பல கேள்விகள் கேட்டு அதற்கான தீர்வை தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்…!!

எனக்கு தெரிந்த, என் வாழ்வில் பயன்படுத்திய சில ஆலோசனைகளை, இந்த கட்டுரை மூலம் பகிர்ந்துக் கொள்ள ஆசை படுகிறேன்..!!!

கவலை போக்க ஒரே வழி இறை நினைவு தான்…!!
ஆம், கவலை மட்டும் இல்லை..!! கவலையை வெளிப்படுத்தும் சோகம், துக்கம், பலவீனம் மற்றும் கோபம், வெருப்பு, பொறாமை, ஆகிய அனைத்திற்கும் தீர்வு இறை நினைவு மட்டும் தான்…!!

الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ

  1. நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.477

திருக்குர்ஆன் 13:28

நாம் ஒன்றை புரிந்துக் கொள்ள வேண்டும்…!!
ஓரிறை கொள்கையில் இருக்கும் நாம் எதற்கும் கவலை பட கூடாது…!! நாம் அனைத்து பொருப்புகளை இறைவனிடம் விட்டு.. விட்டு.., நமக்கு பக்க பலமாக இறைவன் இருக்கிறான்..!! என்று நிம்மதி அடைய வேண்டும்.
அமைதியையும்,சோதனைகளை எதிரகொள்ளும் துணிவையும் ஏக இறைவனிடத்தில் இறைஞ்சிட வேண்டும்….!!!

قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ ۗ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ

  1. “நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:31

இது அழியும் வாழ்க்கைதான்…!! என்று நம் அனைவரும் ஏற்கிறோம்..!! ஆனால், கவலைகளின் போது ஏதோ இவ்வுலகிலேயே நிரந்தரமாக இருக்கபோவதாக எண்ணி நம்முடைய அதிருப்திகளை வெளிப்படுத்துகிறோம்…!!!

எனவே, கவலையை கைவிடுங்கள்…!!

இன்னொரு விசயத்தை புரிந்துக் கொள்ளுங்கள்..!!
ஷைத்தான் ஒருவனை வழிகெடுக்க நினைத்தால் அவனை கவலையில் ஆழ்த்துக்கிறான்..!!
இறைவன் ஒருவனுக்கு நேர் வழி காட்ட விரும்பினால் இஸ்லாத்தை பற்றிய புரிதலை தருகிறான்….!!

எனவே புரிதலை நோக்கி விரையுங்கள்…!!
கவலைகளை கைவிடுங்கள்…!!!

கவலையை கைவிட்டு இறை நினைவில் வாழுங்கள்..!! அவ்வாறிருந்தால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி நிச்சயம்…!!!

என் தந்தை எனக்கு கூறியது, உன்மையான மகிழ்ச்சி என்பது பிறரை சந்தோஷப்படுத்தி பார்ப்பது தான்…!!!

எனவே மகிழ்வித்து மகிழுங்கள்…!!

கவலைகளை கைவிடுங்கள்…!!!

மனக்கவலைகளை போக்குமாறு மகத்தான இறைவனிடம் கையேந்தியவனாக

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *