அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…..
அன்புள்ள சகோதர சகோதரிகளுக்கு
கஜா புயல் வரவு செலவு கணக்கில் YMJ அமானித மோசடி செய்துவிட்டதாக நமது அமைப்பின் முன்னாள் தலைவர் சகோ. ஹாஜா நூஹ் அவர்கள் 2019ம் ஆண்டு மே மாதம் 4 ம் தேதி வீடியோ மூலம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கு ஆதாரமாக அவர் கூறுகையில் குமரி மாவட்டம் சார்பாக வசூலிக்கப்பட்ட தொகை 1,72,040 ரூபாய் எனவும் அதில் 1,52,040 ரூபாய் அமைப்பின் பொதுச் செயலாளர் சுல்தான் அவர்களுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பியதாகவும் அத்துடன் 16,000 ரூபாய் பயண செலவு என கூறப்பட்டதாக ஒர் செய்தி அமைப்பின் தலைவராக இருந்த ஹாஜா நூஹ் அங்கம் வகித்த நிர்வாக வாட்ஸ் அப் குழுமத்தில் பதியப்பட்டதாகவும் கூறியுள்ளார். இதில் 4,000 ரூபாய் எங்கே போனது ?
இதனால் கணக்கில் குளறுபடி இல்லை மாறாக கணக்கில் மோசடி செய்துள்ளதாக நிறுவ முற்பட்டுள்ளார். அத்துடன் இந்த கணக்கை Tally செய்து தந்தால் 1 கோடி ரூபாய் தருவதாக சவாலாக கூறியுள்ளார்.
கஜா புயல் வரவு செலவு கணக்கில் YMJ அமானித மோசடி செய்துவிட்டதாக நமது அமைப்பின் முன்னாள் தலைவர் சகோ. ஹாஜா நூஹ் அவர்கள் 2019ம் ஆண்டு மே மாதம் 4 ம் தேதி வீடியோ மூலம் குற்றம் சாட்டியுள்ளார்.
அல்ஹம்துலில்லாஹ் இந்த குற்றச்சாட்டின் மூலம் இதன் உண்மையை உலகிற்கு அறிய செய்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்.
சகோ. ஹாஜா நூஹ் சொன்ன வாட்ஸ் அப் செய்தி 2018 ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி மாலை 6.41 pm அமைப்பின் பொது செயலாளர் சுல்தான் அவர்களால் குமரி மாவட்டத்திலிருந்து வந்த செய்தி பகிரப்பட்டது. ( அதன் ஸ்கிரின் ஷாட்டை உன்மை அறியும் குழு என்ற பெயரில் சிலர் இன்று பதிந்துள்ளனர் பார்க்க புகைப்படம் -1 ) இனைக்கப்பட்டுள்ளது.

இது தவிர சகோ. ஹாஜா நூஹ் மோசடி என சொன்ன 4000 ரூபாய் எங்கே ? என்று கேட்ட தொகை அதே நாள் 7ம் தேதி டிசம்பர் 2018 மாலை 6.28க்கு சகோ. குமரி அப்துர் ரஹ்மானால் சகோ. சுல்தான் அவர்களின் கணக்கிற்க்கு ட்ராஸ்ஃபர் செய்யப்பட்டது (பார்க்க பணம் அனுப்பிய ட்ரான்ஸ்பர் ரசீது புகைப்படம்-2) இதில் சந்தேகம் இருந்தால் Axis வங்கியில் இதனை சரிபார்த்து கொள்ளலாம்.
ஆக முதல் கட்டமாக 2018 நவம்பர் 31ம் தேதி அன்று ரூபாய் 1,52,043 (ஒறு லட்சத்து ஐம்பத்தி இரண்டாயிரத்தி நாற்பத்தி மூன்று ) ரூபாயும் அடுத்து குமரி மாவட்டத்திலிருந்து நிவாரண பொருட்கள் மற்றும் தொண்டர்களுடன் வந்து களப்பணிகளை முடித்துவிட்டு அதற்க்கான பயண செலவு 16,000/- என தான் வாட்ஸ் அப் செய்தி அனுப்பட்டது.
மீதம் பாக்கி இருந்த அந்த 4000 ரூபாய் அனுப்பியதற்க்கான ரசீதை அன்றைய தினமே (7 டிசம்பர் 2018) மாலை 6.28 க்கு Transfer செய்யப்பட்டுள்ளது ( இதற்கான Axis வங்கி ரசீது இனைக்கப்பட்டுள்ளது (புகைப்படம்-2)

ஆக இரண்டு தவனைகளில் மொத்தம் ரூபாய் 1,56,043/- ( ஒர் லட்சத்தி ஐம்பத்தி ஆறாயிரத்தி நாற்பத்தி மூன்று ரூபாய் பார்க்க புகைப்படம்-4) சகோ குமரி அப்துர் ரஹ்மான் அவர்கள் சகோ. சுல்தான் அவர்களுக்கு அனுப்பப்பட்டது. இத்துடன் சேர்த்து ரூபாய் 16,000/- பயண செலவு செய்யப்பட்டுள்ளது.

ஆக அவர் சொன்னதை போல் 1,72,040 என்பது தான் தவறானது மாறாக 1,72,043 (ஒர் லட்சத்தி எழுபத்தி இரண்டு ஆயிரத்தி நாற்பத்தி மூன்று) ரூபாய் என்பதே சரியானது. இந்த தொகைக்கான ரசீது மாவட்டத்திற்க்கு அமைப்புத் தலைமை ரசீது புத்தகத்தின் ரசீது என் -474 கொடுக்கப்பட்டுள்ளது . (பார்க்க ரசீது இனைக்கப்பட்டுள்ளது புகைப்படம்-3)

ஆக சகோ. ஹாஜா நூஹ் அவர்கள் கேட்ட அந்த 4000 ரூபாயும் கஜா புயல் கணக்கில் சேர்க்கப்பட்டு முறையாக அதற்கான ரசீது அமைப்பின் தலைமை மூலம் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்து அவர் சொல்லும் OnlineYmj முகநூல் பக்கத்தில் டிசம்பர் 2ம் தேதி பதிந்த நேரலை வீடியோவை
(https://www.facebook.com/OnlineYMJ/videos/270885673784643/ ) பொருத்தவரையில் இது நிவாரணம் பணிகள் நடைபெற்று கொண்டு இருந்த போது சகோ. குமரி அப்துர் ரஹ்மான் சொல்லும் போது 1,72,000/- ரொக்கபணமாகவும் மற்றும் தார்பாய் பிஸ்கட் மாநிலத்தலைமையில் ஒப்படைத்து என்ற வாசகம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வங்கி மூலம் 1,52,043 ஒப்படைத்து மீதம் இருந்த 20,000/- தொகையை தலைமையிடம் ஒப்படைத்து அதில் ரூபாய் 16,000 பயண செலவானது. (கண்ணியகுமரியிலிருந்து நிவாரண பொருட்களுடன் தொண்டர்கள் திருத்துறைப்பூண்டி வந்து திரும்பி செல்ல) ஆன செலவு போக பாக்கி தொகை தான் அந்த 4000 ரூபாய் டிசம்பர் 7ம் தேதி வங்கி கணக்கிற்கு அனுப்பபட்டது (புகைப்படம்-2)
கஜா புயலை பொருத்த வரையில் எந்த ஒர் குளறுபடியோ அமானித மோசடியோ நடைபெறவில்லை என்பதனை பொதுமக்களுக்கு தெரிவித்து கொள்வதோடு.
கஜா புயல் நடைபெற்ற போது அமைப்பின் தலைவராக பொறுப்பு வகித்த தற்போது குற்றம் சாட்டக்கூடிய சகோ. ஹாஜா நூஹ் அவர்கள் அப்படி முறைகேடு நடைபெற்றதாக கருதி இருந்தால் அந்த வாட்ஸ் அப் செய்தியை சுட்டிக்காட்டி அதை அன்றைய தினமோ ( டிசம்பர் 7ம் தேதி 2018 ) அல்லது தான் ராஜினாமா செய்வதற்க்கு (ஜனவரி 11 2019) க்கு முன்பாகவோ சுட்டி காட்டி சரி செய்திருக்கலாம் அதற்க்கான பொருப்பும் கடமையும் அவருக்கு தான் இருந்தது ஆனால் அதை செய்யாமல் தற்போது குற்றம்சாட்டுவது வேடிக்கையாக உள்ளது.
YMJ வை பொருத்தவரை தேவையற்ற விமர்சனங்களுக்கு பதிலளித்து நமது நேரத்தையும் மற்றவர்வளின் நேரங்களையும் வீணடிக்காமல் சமூதாயத்திற்க்கு ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட வேண்டும் என நினைக்கிறோம்.
இருந்தாலும் இந்த குற்றச்சாட்டின் மூலம் மக்களுக்கு YMJ வின் வரவுசெலவு கணக்குகளின் வெளிப்படைத்தன்மையை அறிய செய்த அல்லாஹ்விற்கே எல்லா புகழும்..
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். அல்குர்ஆன் 5:8
குறிப்பு : YMJ சகோதரர்கள் சமூக தளங்களில் இது குறித்து தேவையற்ற பதிவுகளையும் விமர்சனங்களையும் பின்னுட்டங்களையும் தவிர்த்து ரமலானில் அமல்களை அதிகப்படுத்துமாறு கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு
அப்துல் மாலிக்
அமைப்பு பொருளாளர்
திருத்தம் :
- 4000 ரூபாய் அனுப்பியது 6.28 க்கு வாட்ஸ் அப் செய்திக்கு முன்
- நவம்பர் 31ம் தேதி என்பதனை நவம்பர் 30ம் தேதி மாற்றி வாசிக்கவும்