ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ள முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றும் ஒரு திட்டமாக +2 தேர்வில் மாநில மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஊக்கப்படுத்த “ சமுதாய செல்வம் விருது “ வழங்கி பரிசளிக்கும் நிகழ்ச்சி ஜுன் 23 ஞாயிற்றுகிழமை மாலை திருச்சி மீனாட்சி மஹாலில் வைத்து அமைப்பின் தலைவர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதல் அமர்வாக அமைப்பின் ஆலோசகர் ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் “ மாறி வரும் உலகில் மாணவர்களின் பங்கு “ என தலைப்பில் உரையாற்றி சமூக பனியாற்றி வரும் அமைப்புகள் மற்றும் கல்வியாளர்களின் பங்களிப்பை விளக்கி விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சமூக பணிகள் மற்றும் கல்விச் சேவைக்கான விருதுகள் கீழ்கண்டவர்களுக்கு வழங்கி கெளவிரக்கப்பட்டது. விருது பெற்றவர்கள் தங்களது அமைப்புகளின் சமூக பணிகளை அறிமுகபடுத்தி மாணவர்களை சமூக பணிகளில் ஈடுபட வேண்டிய அவசியத்தை விளக்கினர்.
- சலீம் – ஜீவசாந்தி அறக்கட்டளை , கோவை*
- ஷெஹ்னாஸ் – அனையா அடுப்பு , ஜீவ சாந்தி அறக்கட்டளை , கோவை
- Puliyangudi Academic & Achievement’s Resource Trust (PAART)
- Wisdom கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி மையம் , சென்னை
- தமீம் , Dean, MAM Polytechnic College , திருச்சி


சிந்தனையை தூண்டிய சிறப்புரை
இறுதி அமர்வில் அமைப்பின் மாநில துணைத் தலைவர் P.M. அல்தாஃபி அவர்கள் மாணவர்கள் தாங்கள் பெற்ற கல்வி அறிவின் மூலம் பிறருக்கும் , சமூகத்திற்கும் எப்படிப் பயனளிக்க வேண்டும் என்று சிந்தனை பூர்வமாக உரை நிகழ்த்தினார்.
சமுதாய செல்வம் விருது ஏன்?
விருதுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட விதமும் , விருதுக்கான நோக்கத்தையும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டிய அவசியத்தையும் விளக்கி சகோதரர் போத்தனூர் நசீர் மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இவ்விருதுக்காக 120 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் 92 நபர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். தேர்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கேடயம் , சான்றிதழ் மற்றும் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தவர்க்கு 20,000 ரூபாயும் , இரண்டாமிடம் பிடித்தவர்க்கு 10,000 ரூபாயும் , மூன்றாமிடம் பிடித்தவர்க்கு 5000 ரூபாயும், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு *5000 ரூபாய் வழங்கப்பட்டது.

மருத்துவ கனவை நினைவாக்கிய சமுதாய செல்வம் விருது
கடந்த ஆண்டு சமுதாயச் செல்வம் விருது பெற்ற மாணவர் அப்பாஸ் நாம் வழங்கிய விருது மற்றும் ஊக்கத்தொகையால் இன்று மருத்துவ கல்வியின் கனவு நினைவாகி இருப்பதாக கூறினர்.. சிறந்த மருத்தவராகி சேவையாற்றஅவருக்கு ஜமாஅத்தின் சார்பாக “ Stethoscope” வழங்கப்பட்டது.

மாணவனை தேடி வந்த ஆசிரியை
தன்னிடம் 2ம் வகுப்பில் படித்த கடையநல்லூர் V. A .அஹமது ரிஸ்வான் 12 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்து Y M J வின் சமுதாயச்செல்வம் விருதைப் பெறுவதை அறிந்து பாராட்ட வந்த ஆசிரியை V. விஜயா அவர்களுக்குக்கு குர்ஆன் வழங்கப்பட்டது.
புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்திய இமாம்
மதுரை கோரிப்பாளையத்தை சேர்ந்த மாணவி அஹ்மத் தானிஷ் அவர்களுடைய தந்தை மதுரை கோரிப்பாளையம் பள்ளி இமாம் மாணவர்களை புத்தக வாசிப்பை ஊக்கப்படுத்தியும் மாணவர்கள் இச்சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பங்களிப்பை விளக்கினார்.
நம்பிக்கையூட்டும் “சமுதாயச் செல்வங்கள்”
600 க்கு 598 எடுத்த கோவையை சேர்ந்த
மாணவி நூர் ஜாபினா, 593 மதிப்பெண் எடுத்த காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவர்
முஹம்மது முஷாரஃப் , 589 மதிப்பெண் எடுத்த தஞ்சையை சேர்ந்த மாணவர் அப்துல் வாஜித் மற்றும் 75க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நிர்வாகிகள் பரிசு வழங்கினர்.



மாணவர்கள் எடுத்த அதிக மதிப்பெண்கள் மட்டும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை அவர்கள் உரையாற்றிய உரை , அவர்களின் தொலை நோக்கு பார்வை, சமூக அக்கறை போன்றவையை கண் கூடாக பார்த்தது நெகிழ்ச்சியூடன் நம்பிக்கையூட்டியது. அல்ஹம்துலில்லாஹ்
இம்மாணவர்கள் “ சமுதாயச் செல்வங்களாக” ஜொலிப்பார்கள் இன்ஷா அல்லாஹ்
மெய்சிலிர்ந்த பெற்றோர்
இந்நிகழ்ச்சியில் பரிசு பெறும் மாணவர்களுடன் பெற்றோர்களும் 2 பேர் கலந்து கொள்ளலாம் என அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை ஜமாஅத்தின் சார்பாக செய்யப்பட்டது. மாணவர்கள் பரிசு பெறும் போது அவர்களுடைய பெற்றோர்களும் மேடையேறி பரிசு பெற்றது பெற்றோர்களை மெய்சிலிர்க்க வைத்தது என்றால் மிகையாகாது.
விருது பெற்ற அந்த நொடி கடந்த காலங்களில் பிள்ளைகளை படிக்க வைக்க பட்ட கஷ்டப்பட்ட காயத்திற்க்கான மருந்தாக அமைத்தது.
குழு புகைப்படம்
குருப் போட்டோ எடுக்க மாணவர் மேடையை அலங்கரித்தனர். அனைவரையும் ஒரே புகைப்படத்தில் அடக்க முடியாமல் போனது.
சமுதாயச் செல்வம் 2024 விருது பெற்ற மாணவர்கள் மேடையேறி குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேடைக்கு கீழ் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை படமெடுக்க படையெடுத்தனர்.
*உணவு மற்றும் உணர்வாய் உன்னை *
மாணவர்களுக்கு உணர்வாய் உன்னை மற்றும் “குர்ஆன் தமிழாக்கம்”* இலவச பிரதி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இரவு விருந்துடன் நிகழ்ச்சி முடிவுற்றது.
கண் கலங்கிய நிர்வாகிகள்
இவ்விருது அறிவிக்கப்பட்ட போது இதற்கென ஒரு ரூபாயும் இல்லாமல் இருந்த நிலையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற காரணமாக இருந்த நன்கொடையாளர்களுக்கு ஜமாஅத்தின் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்நிகழ்வில் கலந்துக் கொண்டவர்களின் நிலை மற்றும் அவர்கள் நம்மிடம் வைத்த கோரிக்கைகள் நிர்வாகிகள் அனைவரையும் கண் கலங்க
செய்ததுடன் நமது பொறுப்பையும் கடமையையும் இன்னும் வீரியமாக செயலாற்ற வேண்டிய அவசியத்தையும் உணர செய்தது.
இந்நிகழ்விற்கு தொண்டாற்றிய நிர்வாகிகள் அனைவருக்கும் ஜஸாக்கல்லாஹ் ஹைரன்

சமுதாயச் செல்வம் நிகழ்ச்சியை சிறப்பாக்கிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும். அல்ஹம்துலில்லாஹ்