ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் தேனி மாவட்டம் சார்பாக நடைபெறும் பணிகளில் ஒன்றாக ‘உணவு வழங்கும் திட்டம்’ மேற்கொள்ளப்பட்டு அது நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.
அப்பணியின் மூன்றாம் கட்டமாக இன்று (09.02.19) தேனியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் அனைவருக்கும் சுவையான சிக்கன் பிரியாணி சமைத்து பரிமாறப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
இப்பணிக்கு ஒரு சகோதரர் முழு செலவினை ஏற்றுக்கொண்டார். அவருக்காக துஆ செய்யுமாறும், மேலும் இப்பணி தொடர உங்களாலான பொருளாதார உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
‘அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்’
-திருக்குர்ஆன் 76:8
தொடர்புக்கு: 9043193173