ஆஷூரா நோன்பின் நோக்கமும் நன்மையும்

துல்ஹஜ் மாதத்திற்கு அடுத்து வரும் முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷூரா நோன்பு எனப்படுகிறது. நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஆஷூரா நோன்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ளார்கள் . இந்நாளில் நோன்பு நோற்க்கும்படி இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமளான் எனும்) இந்தமாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றை விடச்சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்புநோற்பதை நான் பார்த்ததில்லை.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),நூல்: புகாரி 2006ஆஷூரா […]