நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா)

நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா) ஒரு கட்டாயக் கடமையாகும். அன்புள்ள சகோதர, சகோதரிகளே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ். ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும், இதனை பின்வரும் நபி மொழியிலிருந்து அறியலாம். ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக […]