YMJ சோழபுரம் கிளை மரக்கன்றுகள் நடும்பணி

YMJவின் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் மற்றும் புதிய ஜுமுஆ ஆரம்பம்…

இறைவனின் மாபெரும் கிருபையினால் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் புதுக்கோட்டை மாவட்ட அலுவலகம் மற்றும் ஜூம்ஆ பள்ளிவாசல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது! இடம்: 53/2, அப்துல்ஹமீது தெரு,பழைய டைமண்ட் ஸ்கூல் எதிரில், அறந்தாங்கி அதேபோன்று இந்த கட்டிடத்தில் விரைவாக ஜூம்ஆ நடத்துவதற்கு மெகாபோன், மைக் ஸ்டாண்ட், பாய், ஸ்கிரீன், ஃபேன், லைட் என பல்வேறு அவசியமான பொருட்கள் வாங்குவதற்கு பொருளாதாரம் தோராயமாக 30,000 தேவைபடுகிறது. உங்களால் இயன்றளவில் பொருளாகவோ, பணமாகவோ கொடுத்து உதவினால் நாம் விரைவாக ஜூம்ஆ நடத்துவதற்கு உதவியாக இருக்கும். […]
YMJவின் சோழபுரம் கிளையில் இரத்ததான முகாம்

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சோழபுரம் கிளையில் இரத்த தான முகாம் 26.01.2019 இன்று இனிதே துவங்கியது! அல்ஹம்துலில்லாஹ்! இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சாக்கோட்டை க. அன்பழகன் MLA, ரிச்சர்ட் செல்வகுமார்(சிறப்பு துணை காவல் ஆய்வாளர்), மேலப்பள்ளி நாட்டாண்மை, கீழப்பள்ளி நாட்டாண்மை கலந்து கொண்டனர். துவக்கவுரையாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் மாநில து.பொதுச்செயலாளர் சகோ.இமாம் அலி அவர்கள் நிகழ்த்தினார்கள். ரோட்டரி ரத்த வங்கி மேலாளர் சகோ.கபூர் அவர்கள் இரத்த தான கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி சிறப்புரை நிகழ்த்தினார். […]
பொறையாரில் YMJவின் புதிய கிளை

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் சார்பாக.. பொறையாரில் புதிய கிளைஅமைக்கப்பட்டு அதன் பொறுப்பாளர்களும்நியமிக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்! மார்க்க & சமுதாய பணிகள் சிறக்க துஆ செய்யவும்.