ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக மனிதகுல வழிகாட்டி நபிகள் நாயகம் (ஸல்) கருத்தரங்கம் மற்றும் “என் பார்வையில் முஹம்மது நபி (ஸல்) “ கட்டுரைப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி 01-08- 2021 ஞாயிறு மாலை 5 மணி முதல் திருச்சி ராசி மஹாலில் நடைபெற்றது.
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் பொருளாளர் திருப்பூர் அப்துர் ரஹ்மான் துவக்கவுரையாற்றினார். அதனை தொடர்ந்து
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடக பெங்களூர் என பல்வேறு பகுதியிலிருந்து தங்கள் குடும்பத்துடன் வந்திருந்த கட்டுரையாளர்கள் முஹம்மது நபி ஸல் அவர்களை பற்றிய தங்களின் பார்வையையும் அவருடைய வாழ்விலிருந்து தாங்கள் பெற்றுக் கொண்ட படிப்பினையும் பகிர்ந்தது வந்திருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் இயக்குநர் கெளதமன் முஹம்மது நபி ஏற்படுத்திய சமூக புரட்சியை பற்றி உரையாற்றினார்.
இறுதியாக ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் தலைவர் அல்தாஃபி “ அகிலாத்தாருக்கு அருட்கொடை அண்ணலார்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.
முக்கிய நிகழ்வான பரிசளிப்பு நிகழ்ச்சி பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருத்தோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதல் பரிசு ரூபாய் 20,000/- மற்றும் பரிசு பொருட்கள் பெரம்பலூரை சேர்ந்த ச மோகன் அவர்களுக்கும் மூன்றாம் பரிசு ரூபாய் 5000/- மற்றும் பரிசு பொருட்கள் பாண்டிசேரியை சேர்ந்த பாரதிராஜா அவர்களுக்கும் வழங்கப்பட்டது .
ஆறுதல் பரிசாக 33 நபர்களுக்கு தலா ஆயிரம் ரூபாயும் பரிசு பொருட்களுக்கும் , கட்டுரை போட்டியில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசு ரூபாய் 10,000/- சமூக ஆர்வலர் சபரிமாலா அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அவர் பரிசளிப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள ஆர்வமாக இருந்தாகவும் சில தவிர்க்க இயலாத தொலைகாட்சி ஒளிபதிவு உள்ளதால் கலந்துக் கொள்ள இயலததற்கு ஆதங்களை பதிவு செய்துக் கொண்டார்.
இறுதியாக ஜமாஅத்தின் துணை பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ரஜாக் நன்றியரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கலந்துக் கொண்ட பலரும் தங்களின் வாழ்வின் மறக்க முடியாத நிகழ்வாக இன்றைய நிகழ்ச்சி அமைந்ததாக கூறி சென்றனர்.
நிகழ்ச்சியை ஜமாஅத்தின் துணைத் தலைவர் ஐ சேக் தலைமையில் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வை சிறப்பாக அமைத்து கொடுத்த ஏகனாகிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.
குறிப்பு : தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 470 க்கும் மேற்பட்டோர் கட்டுரை எழுதியுள்ளதால் அனைவரும் திருச்சி வர சாத்தியம் இல்லை என்பதால். கட்டுரையாளர்கள் அனைவருக்கும் அவர்களுக்குரிய பரிசுகள் விரைவாக சேர்பிக்கப்படும். இறைவன் நாடினால்.



