ஹரியானா மாநிலத்தில் முஸ்லிம் குடும்பத்தினர் தாக்குதல் – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்.
கடந்த வியாழக்கிழமை (21-03-2019) மாலை இந்தியா நாட்டின் தலைநகரமான தில்லியிலிருந்து 50 கிமீ தொலைவிலுள்ள குர்கவுன் நகரத்திலுள்ள தமஸ்புர் கிராமத்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடி கொண்டு உள்ளனர்.
அப்பாவி சிறுவர்களையும் குடும்பத்தினரையும் ஹோலி கொண்டாடிவிட்டு வந்த 25 பேர் சேர்ந்த கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. “விளையாட வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்கு” சென்று விளையாடுங்கள் என குளைத்துள்ளது . இச்சம்பவத்தை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
பாசிச பா ஜ க அரசு பதவி ஏற்றதிலிருந்து முஸ்லிம்கள் மற்றும் தலித்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழுத்து விடப்படுள்ளது . பசுவின் பெயரால் பல முஸ்லிம்கள் கொப்பட்டுள்ளனர்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் நாட்டின் தலைநகருக்கு அருகாமையிலேயே இது போன்ற காட்டுமிராண்டி சம்பவங்கள் நடப்பது வருத்தமளிக்கிறது.
சமீபத்தில் அமெரிக்க உளவு நிறுவனம் இந்தியாவில் தேர்தலுக்கு முன் கலவரங்கள் நடக்கலாம் என ஆய்வு அறிக்கை சமர்பித்து இருந்தது.
கடந்த 5 ஆண்டு பா ஜ க ஆட்சியில் மக்கள் சொல்லொனா துயரங்கள் ஆளாகியுள்ளனர், இதனால் வரும் தேர்தலில் தோல்வி உறுதியானதை தெரிந்து கலவரங்கள்
மூலம் மக்களை பிரித்து தனது இழந்த செல்வாக்கை பெற பாசிச பாஜக முயலும் என மக்கள் கருதுகின்றனர். மூன்று தினங்களுக்கு முன் உத்தரபிரதேச மாநில அவுரங்காபாத் நகரில் 3 டன் வெடி மருந்துகள் பிடிபட்டுள்ளது. இது சந்தேகத்தை மேலும் வலுக்க செய்கிறது.
இச்சம்பத்தில் ஈடுபட்டுள்ள சிலர் சாதாரண பிரிவுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர், இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கேட்டு கொள்கிறது.
நாட்டின் மக்கள் இது போன்ற சதிகளை அறிந்து விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கேட்டு கொள்கிறது.
இப்படிக்கு
முஹம்மது சுல்தான்
பொதுச் செயலாளர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
98841-32651