மனிதனுடைய தன்மைகளை பற்றி அல்லாஹ் குர் ஆனில் கூறும் சில வசனங்கள்
அல்லாஹ் உங்களுக்கு (சட்டங்களை) எளிதாக்கவே விரும்புகிறான். (ஏனெனில்) மனிதன் பலவீனனாகப் படைக்கப்பட்டுள்ளான்.[அல்குர்ஆன் 4:28]
நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன்.[அல்குர்ஆன் 14:34]
நன்மைக்காகப் பிரார்த்திப்பது போலவே தீமைக்காகவும் மனிதன் பிரார்த்தனை செய்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான். [அல்குர்ஆன் 17:11]
என் இறைவனது அருளின் கருவூலங்களுக்கு நீங்கள் உரிமையாளர்களாக இருந்திருந்தால் செலவிட அஞ்சி உங்களிடமே வைத்துக் கொண்டிருப்பீர்கள்! மனிதன் கஞ்சனாகவே இருக்கிறான்” என்று கூறுவீராக![அல்குர்ஆன் 17:100]
மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான்.[அல்குர்ஆன் 18:54]
மனிதன் பதறுபவனாக படைக்கப்பட்டுள்ளான்.அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் திடுக்கிடுகிறான்.அவனுக்கு நன்மை ஏற்பட்டால் கொடுக்காமல் தடுப்பவனாக ஆகிறான்.[அல்குர்ஆன் 70:19-21]
ஆனால் அவனுக்கு (இறைவனுக்கு) முன்னால் குற்றம் செய்யவே மனிதன் நாடுகிறான்.[அல்குர்ஆன் 75:5]
அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான்.[அல்குர்ஆன் 96:6-7]
மனிதன் நட்டத்தில் இருக்கிறான்.[அல்குர்ஆன் 103:2]