மத்திய அரசில் பணியாற்ற வேண்டுமா? 12 ஆயிரம் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு!

மத்திய அரசிற்கு உட்பட்ட இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நேரு யுவகேந்திரா தேசிய இளையோர் தொண்டர் பணியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 12 ஆயிரம் பணியிடங்கள் அறிவிப்பப்பட்டுள்ள நிலையில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நேரு யுவகேந்திரா அமைப்பின் சார்பில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:-
நேரு யுவகேந்திராவில் தேசிய இளையோர் தொண்டராகப் பணியாற்ற ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 18 முதல் 29 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மாத மதிப்பூதியமாக ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உயர்கல்வி, கணினித்திறன் பெற்றவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், மகளிர் மன்ற உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முழு நேர மாணவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது.
www.nyks.nic.in என்னும் நேருயுவகேந்திராவின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி மார்ச் 3 ஆகும்.
—————————————————————————————————————————————-
கல்வி , வேலைவாய்ப்பு ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்கு அனுகவும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
[email protected] | வாட்ஸ் அப் : +91-82481-08188