மக்களை காக்கும் “காவலர்களா” ? அல்லது மக்களை “கொல்லும் கொலையாளிகளுக்கு காவலர்களா”?
பாசிச சங்பரிவார கும்பல்களின் தொடரும் அராஜகப்போக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்
கடந்த வியாழக்கிழமை (21-03-2019) மாலை பா ஜக ஆளும் ஹரியானா மாநிலம் குருகிராம்( குர்கவுன்) நகரத்திலுள்ள தமஸ்புர் கிராமத்தில் வசித்து வரும் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு ஹோலி கொண்டாடிவிட்டு
வந்த 25 பேர் கொண்ட ரவுடி கும்பல் அப்பாவி சிறுவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தினர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது. விளையாட வேண்டும் என்றால் பாகிஸ்தானுக்குசென்று விளையாடுங்கள் என அந்த கும்பல் அவர்களை அச்சுருத்தியுள்ளது.
இதேபோன்று கடந்த புதன்கிழமையன்று (20-03-2019) அன்று பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேச மாநிலத்தில் சொபத்ரா மாவட்டம்,பர்சொய் எனும் கிராமத்தைச்சேர்ந்த
முஹம்மது அன்வர் என்ற 50 வயது முதியவரை 20 பேர்கொண்ட கும்பல் அடித்துக் கொன்றுள்ளது.
இந்த கொலையில் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ரவிந்த கர்வார்
என்பவன் மீது முதன்மை குற்றவாளியாக வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது.
இக்கிராமத்தில் பல சமூக மக்கள் அமைதியாக வாழ்ந்து வந்த நிலையில் ரவிந்த கார்வார் 6 மாதத்திற்கு முன் அங்கு RSS கிளை தொடங்கி சாகா பயிற்சிகள் நடத்தி வந்துள்ளான்.
பாசிச பா ஜ க அரசு பதவி ஏற்றதிலிருந்து முஸ்லிம்கள் மற்றும் தலித்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது . பசுவின் பெயரால் பல முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் இது போன்ற காட்டுமிராண்டி சம்பவங்கள் நடப்பது மத்திய அரசின் கையாலாகாத்தனத்தையே காட்டுகிறது.
சமீபத்தில் அமெரிக்க உளவு நிறுவனம் ஒன்று இந்தியாவில் தேர்தலுக்கு முன் மதக்கலவரங்கள் நடக்கலாம் என ஆய்வறிக்கை சமர்பித்தது குறிப்பிடத்தக்கது. தொடரும் இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் பாஜக அரசு மௌனியாக இருப்பது, அரசின் துணையோடுதான் இச்சம்பவங்கள் நடைபெறுகிறது என மக்கள் முடிவு செய்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டு பா ஜ க ஆட்சியில் மக்கள் சொல்லொனா துயரங்களுக்கு ஆளாகியுள்ளனர்.இதனால் வரும் தேர்தலில் தோல்வி உறுதியானதை தெரிந்து கலவரங்கள்
மூலம் மக்களை பிரித்து ஆட்சியில் அமர பாசிச பாஜக முயலும் என மக்கள் கருதுகின்றனர்.
மூன்று தினங்களுக்கு முன் உத்தரபிரதேச மாநில அவுரங்காபாத் நகரில் 3 டன் வெடி பொருட்கள் பிடிபட்டுள்ளது மேலும் சந்தேகத்தை வலுக்கச்செய்கிறது.
இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.
தன்னை “சவ்கிதார்” (காவலாளி)என கூறிக்கொள்ளும் பிரதமர் மோடி மற்றும் அவரது வகையறாக்கள் நாட்டு மக்களை காக்கும் “காவலர்களா” ? அல்லது மக்களை “கொல்லும் கொலையாளிகளுக்கு காவலர்களா”?
இது போன்ற நாட்டின் பன்முகத்தன்மைக்கு குந்தகம் விளைவிக்கும் அரசாங்கத்தை அகற்றி நாட்டின் மதச்சார்ப்பின்மையை காக்க மக்கள் முன்வர வேண்டும் என ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
முஹம்மது சுல்தான்
பொதுச் செயலாளர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
98841-32651