கடந்த 2017 ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஜெய்பூர் – தில்லி தேசிய நெடுஞ்சாலையில் வைத்து பசு பாதுகாவலர்கள் என தங்களை கூறிக்கொள்ளும் பயங்கரவாதிகளால் கொடூரமான முறையில் பெஹ்லு கான் என்ற முதியவர் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
இக்கொடூரத் தாக்குதலின் வீடியோ வெளியாகி இந்திய மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது ,
இதற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.
இந்த வீடியோ ஆதாரத்தின்படி இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறி 6 நபர்களை காவல்துறை கண்டறிந்து கைது செய்து வழக்கு பதிந்தது , இவர்களை தவிர மூவர் சிறுவர்கள் என்பதால் சிறார் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஜாமினில் வெளிவந்து சுதந்திரமாக உலாவி வந்தனர்.
இவ்வழக்கு ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி சரிதா ஸ்வாமி தலைமையில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் ( 14-08-2019) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும், மொபைல் வீடியோவில் இருப்பது தெளிவாக இல்லை அவர்கள் இருக்கிறார்களா என்பதே தெரியவில்லை’ என்று கூறி அவர்களை விடுவித்தது. `குற்றாவாளிகள் இல்லை’ என்று தீர்ப்பு அளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம். பசு பாதுகாவலர்களுக்கு ஆதராவாக மத்தியில் ஆளும் அரசாங்கம் மட்டுமல்ல நீதிமன்றங்களும் உள்ளன என தெளிவாக பறைசாற்றியுள்ளது இந்த தீர்ப்பு.
இக்கொலைக்கு காரணமானவர்கள் தாக்குதல் நடத்தும் தெளிவான வீடியோ இருந்தும் அவர்களை விடுவித்துள்ளது நீதிமன்றம் , இத்தீர்ப்பின் மூலம் ஜனநாயகத்தின் தூணான நீதிமன்றங்கள் மீதுள்ள மக்களின் நம்பிக்கை இழக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாகவே ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கருதுகிறது. இத்தீர்ப்பால் பசு குண்டர்களிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் ஆயுதம் ஏந்துவார்கள்.
பா ஜ க அரசு பதவியெற்றதிலிருந்து சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அரங்ககேறி வரும் சூழலில் இது போன்ற தீர்ப்புகளால் வன்முறை சம்பவங்கள் இன்னும் அதிகரிக்கும். இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கும் ஒருமைப்பாட்டிற்க்கு நல்லதல்ல. இது உலக அளவில் இந்தியாவிற்கு களங்கத்தையே ஏற்படுத்தும் என ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் எச்சரிக்கிறது.
இப்படிக்கு
முஹம்மது சுல்தான்
பொதுச் செயலாளர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
98841-32651