ஃபித்ரா தர்மம்
முஸ்லிம்களிடையேயுள்ள ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
[அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி 1503]
பெருநாள் தொழுகை நேரம்
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்முதலில் தொழுகையைத் துவக்குவார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள் : புகாரீ (956), முஸ்லிம் (1472?)
ரமலான் பெருநாளுக்கு தொழுகைக்கு முன் சாப்பிடுதல்
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
[அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி 953]
திடலில் தொழுகை
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிக்குச் செல்லாமல்) முஸல்லா என்ற திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன்முதலில் தொழுகையைத் துவக்குவார்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள் : புகாரீ (956), முஸ்லிம் (1472?)
பெண்களும் தொழுகையில் கலந்துக் கொள்ளவேண்டும்
நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்ளவதற்கு மேலாடை இல்லை எனில் என்ன செய்வது? என்றார். அதற்கு அவளுடைய தோழி தனது (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள் : புகாரீ (351), முஸ்லிம் (1475)
பெண்களும் கலந்துக் கொள்ள வேண்டும்
இரண்டு பெருநாட்களிலும் மாதவிடாய்ப் பெண்களையும் வீட்டில் இருக்கிற கன்னிப் பெண்களையும் வெளியேற்றி (தொழும் திடலுக்குப்) அழைத்துவருமாறும், அப்பெண்கள் வீட்டிலிருந்து வெளியாகி முஸ்லிம்கள் தொழுகிற இடத்திற்குச் சென்று அவர்களின் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், தொழும் இடத்தைவிட்டு மாதவிடாய்ப் பெண்கள் ஒதுங்கியிருக்க வேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டோம். நபி (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையைக் கேட்டுக் கொண்டிருந்த பெண்களில் ஒருவர், “இறைத்தூதர் அவர்களே! எங்களில் எவருக்கேனும் அணிந்து கொள்வதற்கு மேலாடை இல்லையெனில் என்ன செய்வது?” எனக் கேட்டதற்கு, “அவளுடைய தோழி தன்னுடைய (உபரியான) மேலாடையை இவளுக்கு அணியக் கொடுக்கட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
[அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி 351]
அல்லாஹ்வை பெருமைபடுத்துதல்
பெருநாளில் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
[அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி 971]
பாங்கு இகாமத் இல்லை
தொழுகைக்கு பாங்கு இகாமத் இல்லை
நபி (ஸல்) காலத்தில் நோன்புப் பெருநாளில் தொழுகைக்காகப் பாங்கு சொல்லப்பட்டதில்லை; தொழுகைக்குப் பிறகே உரையும் அமைந்திருந்தது.
[அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி 959]
சுத்ரா
நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (திடலில் தொழுவதால் தடுப்பாக) நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் ஒரு ஈட்டி நாட்டப்படும். நபி (ஸல்) அவர்கள் (அதை நோக்கித் தொழுவார்கள்)
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல்கள் : புகாரீ 972), முஸ்லிம் (773?)
தொழுகை முறை
நபி (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகையில் சொல்வார்கள். அதற்கு முன்னும் பின்னும் வேறு எதையும் தொழுததில்லை.
அறிவிப்பவா : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி), நூல்கள் : அஹ்மத் (6401), இப்னுமாஜா (1268)
உரைக்கு மிம்பர் இல்லை
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளியில் தொழாமல்) திடலுக்குச் செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையையே துவக்குவார்கள். தொழுது முடித்து எழுந்து மக்களை முன்னோக்குவார்கள். மக்களெல்லாம் தங்கள் வரிசைகளில் அப்படியே அமர்ந்திருப்பார்கள். அவர்களுக்குப் போதனைகள் செய்வார்கள். (கட்டளையிட வேண்டியதை) கட்டளையிடுவார்கள். ஏதேனும் ஒரு பகுதிக்குப் படைகளை அனுப்ப வேண்டியிருந்தால் அனுப்புவார்கள். எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந்தால் உத்தரவிடுவாôகள். பின்னர் (இல்லம்) திரும்புவார்கள்.
மதீனாவின் ஆளுநராக இருந்த மர்வானுடன் நோன்புப் பெருநாள் தொழுகையையோ ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையையோ தொழச் செல்லும்வரை மக்கள் இவ்வாறே கடைப்பிடித்து வந்தனர். (மர்வான் ஆட்சியில் ஒரு நாள்) நாங்கள் தொழும் திடலுக்கு வந்த போது கஸீர் பின் ஸல்த் என்பார் உருவாக்கிய மேடை ஒன்று அங்கே திடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் தொழுவதற்கு முன்பே அதில் ஏற முன்றார். நான் அவரது ஆடையை பிடித்து கீழே இழுத்தேன்.
அவர் என்னை இழுத்தர். முடிவில் அவர் மேடையில் ஏறித் தொழுகைக்கு முன்பே உரை நிகழ்த்தாலானார். அப்போது நான் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் (நபி வழியை) மாற்றிவிட்டீர்கள் என்று கூறினேன்.
அதற்கு மர்வான் நீ விளங்கி வைத்திருக்கும் நடைமுறை மலையேறிவிட்டது என்றார். நான் விளங்காத (இந்த புதிய) நடைமுறையை விட நான் விளங்கிய வைத்துள்ள நடைமுறை அல்லாஹ்வின் மீது ஆணையாக மிகச் சிறந்ததாகும் என நான் கூறினேன்.
அதற்கு மர்வான், மக்கள் தொழகைக்குப் பிறகு இருப்பதில்லை, எனவே நான் தொழுகைக்கு முன்பே உரையை அமைத்துக் கொண்டேன் என்று கூறினார்.
அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்கள் : புகாரீ (956), முஸ்லிம் (1472?)
தொழுகைக்கு பிறகே உரை
நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளைத் தொழுதுவிட்டுப் பிறகு உரை நிகழ்த்துவார்கள்.
[அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), நூல்: ஸஹீஹுல் புகாரி 957]
பிரார்த்தனை
பெருநாளில் நாங்கள் (தொழும் திடலுக்கு) புறப்பட வேண்டுமெனவும் கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச்செய்யவேண்டுமெனவும் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள், ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
அறிவிப்பவர் : உம்மு அத்திய்யா (ரலி), நூல்கள் : புகாரீ (971),முஸ்லிம் (1474)
ஒரு வழியில் சென்று மாற்று வழியில் திரும்புதல்
பெருநாள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் (போவதற்கும் வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : புகாரீ (986)