கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் சமூக வலைத்தளங்கள் மூலம் நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மற்றும் குடும்ப பெண்களை மிரட்டி, அப்பெண்களை கொடூரமான முறையில் சித்தரவதைக்கு உள்ளாகி பாலியல் வன் கொடுமை செய்த அதிர்ச்சி தரும் செய்தி மற்றும் வீடியோ கா வெளியாகி நாட்டிலுள்ள உள்ள அனைவரையும் கொதிப்படைய செய்துள்ளது.
இச்சம்பவம் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக விசாரணை தெரியவந்துள்ளது ஆனால் கடந்த மாத இறுதி வரை எந்த ஒர் நடவடிக்கை எடுக்கப்படாதது அரசு இயந்தரங்களின் மெத்தன போக்கையும் கையாளாகதத்தன்மையும் தான் காட்டுகிறது.
மக்களின் பாதுக்காப்பை குறிப்பாக பெண்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை ஆனால் இன்று வெளியாகியுள்ள செய்தியில் இச்சமபவத்தின் பின்னனியில் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பது கண்டனத்துக்குரியதாகும். நாட்டிலுள்ள பெண்களின் பாதுக்காப்பு பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
பெண்களுடன் தொடர்பு ஏற்பட காரணியாக இருந்த சமூக வலைத்தளங்களில் உள்ள ஆபத்தை அறிந்து பெண்கள் அதிலிருந்து விலகி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
இதன் பின்னனியிலுள்ளவர்கள் அரசின் ஆசியுடன் தப்பிக்க வாய்ப்புள்ளதாக மக்கள் கருதுகின்றனர் ஆகயால் சிபிஐ விசாரனை நடத்தி இந்த ஈனச் செயலில் ஈடுப்பட்ட, துணையாக இருந்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த ஒர் தயவு தாட்சண்யமின்றி கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கேட்டு கொள்கிறது.
இது போன்ற கொடூர சம்பவங்கள் தொடராமல் இருக்க இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டங்கள் நாட்டில் அமுல்படுத்த வேண்டும். அதன் மூலம் மட்டும் தான் பெண்களுக்கான பாதுக்காப்பை உறுதி செய்ய முடியும் எனவும் கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு
முஹம்மது சுல்தான்
பொதுச் செயலாளர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
98841-32561