நாம் குழந்தையாய் பிறந்து,
மனிதனாய் வளர்ந்து,
மரணித்து பின் மண்ணோடு மண்ணாய் மக்கிப்போக இருக்கிறோம்…!!!
நமக்கு இந்த வாழ்வும், சாவும் ஒரு சோதனை தானே தவிர வேறில்லை…!!!
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ
உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான்.
وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ ﴿٢﴾
அவன் மிகைத்தவன்; மன்னிப்பவன்.
அல் குர் ஆன் ( 67:2)
அழகிய செயல் என்பது வெறும் தொழுகையையும், நோன்பையும் இன்னும் பிற காரியங்களையும் மையப்படுத்தியது மட்டுமல்ல…!!
அதில் அழகிய சொற்களும் பயனுள்ள பேச்சுக்களும் கூட அடங்கும்…!!
لَّا خَيْرَ فِي كَثِيرٍ مِّن نَّجْوَاهُمْ إِلَّا مَنْ أَمَرَ بِصَدَقَةٍ أَوْ مَعْرُوفٍ أَوْ إِصْلَاحٍ بَيْنَ النَّاسِ ۚ وَمَن يَفْعَلْ ذَٰلِكَ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا (114)
தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம்.
அல்குர்ஆன் 4 : 114
நம்முடைய நிலையை இந்த திருமறை வசனம் தெளிவாக எடுத்துரைப்பதை இதை படிக்கும் அனைவரும் உணர்வீர்கள்…!!!
மார்க்கமே அறியாதவர்கள் சினிமா கூத்தாடிக்காக சண்டைபோடுகிறார்கள்…!!
மார்க்கம் அறிந்தவர்களோ இயக்கங்களுக்காகவும், இயக்கத் தலைவர்களுக்காகவும் சண்டை போடுகிறார்கள்…!!!
இயக்கங்களே வேண்டாம் என்பவர்களும் இதில் விதிவிலக்கல்ல…!!!
இந்த சண்டைகளை உருவாக்கி விடும் சைத்தானிய எண்ணம் யாருக்கு?? எங்கிருந்து?? வருகிறது என்பது ஓர் புரியாத புதிரே…!!!
இதுபோன்ற பத்து, பதினைந்திற்கும் பயன்படாத வீணான செயலை செய்பவர்களுக்கு திருமறை தெளிவாக கூறுகிறது…
وَمِنْ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ(6) سورة لقمان
அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவுபடுத்தும் வேதனை உள்ளது.
(அல்குர்ஆன் 31:6)
நம்பிக்கை கொண்ட அடியார்களுக்கு திருமறையின் அறிவுரை…!!!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا
- நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்!
திருக்குர்ஆன் 33:70
மேலும் இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைத்தூதர் ஏவும் கட்டளை…!!!
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ …. وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ رواه البخاري
… யார் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்புவாரோ அவர் நல்லதைச் சொல்லட்டும் அல்லது வாய்மூடி இருக்கட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : புகாரீ (6138)
சாதாரண நாட்களைவிட இரமலானுடைய நாட்கள் சிறந்தது…!!
சிறந்த நாட்களில் நல்அமல்களின் மூலம் சிறந்து விளங்கவே முயற்சிப்போம்…!!!
அப்படியும் நான் தானாக பேசவில்லை…என்னை பேச வைக்கிறார்கள்…!!!என நீங்கள் எண்ணினால்…
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اصْبِرُوا وَصَابِرُوا وَرَابِطُوا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
- நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
திருக்குர்ஆன் 3:200
நல்அமல்களுக்கு நல்லதை தவிர வேறு கூலியில்லை…
தீயசெயல்களுக்கு தீயதை தவிர வேறு ஒன்றுமில்லை…
அவரவர் செயலுக்கு அவரவரே பொருப்பாளர்கள்…!!!
ஆயிரம் மாதங்களை விட சிறந்த நாட்களை கொண்ட இந்த இரமலான் மாதத்தில்…
ஆயிரம் நன்மையான காரியங்களை நோக்கி விரைவோம்…!!!
பயனற்ற பேச்சுக்களை விட்டு விலகுவோம்…!!!
இயக்கங்கள் தேயட்டும்…!!
இஸ்லாம் வளரட்டும்…!!!