நோன்புப் பெருநாள் தர்மம் (ஃபித்ரா) ஒரு கட்டாயக் கடமையாகும்.
அன்புள்ள சகோதர, சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.
ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும், இதனை பின்வரும் நபி மொழியிலிருந்து அறியலாம்.
ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக (ஏழைகளுக்கு வழங்க வேண்டுமென்று) நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்காக மக்கள் வெளியே செல்வதற்கு முன்னால் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி).நூல்: புஹாரி-1503.
ஒர் சாவு என்பது 2.5 கிலோவிற்க்கு நிகராணதாகும்
ஃபித்ரா கொடுப்பதின் நோக்கம்
நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன்பாளியை தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாகவும் நபி (ஸல்) அவர்கள் ஃபித்ராவை விதியாக்கினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : அபுதாவூத் 1371
நபிவழிப்படி நடக்க விரும்பும் நாம், நோன்புப் பெருநாள் ஃபித்ரா-தர்மத்தை முறையாக ஏழைகளுக்கு பெருநாள் தினத்திற்க்கு முன் கிடைக்க செய்திடும் நோக்கில் இவ்வாண்டு இன்ஷா அல்லாஹ், ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பில் மக்களிடமிருந்து ஃபித்ரா-தர்மத்தை வசூல் செய்து, அதை உரிய ஏழைகளுக்கு விநியோகம் செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒர் நபருக்கான ஃபித்ரா தொகை ரூபாய் : 150/- என முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, சகோதர சகோதரிகள் உங்கள் மீதும், உங்களது மனைவி மீதும்,உங்களது பிள்ளைகள் மீதும் இன்னும் உங்களது பொறுப்பிலுள்ளோர் மீதும் விதிக்கப்பட்ட ஃபித்ரா-தர்மத்தை, நமது ஜமாஅத்து பொறுப்பாளரிடம் வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
குறிப்பு : இன்ஷா அல்லாஹ் ஜீன் 16ம் தேதிக்குள் ஃபித்ரா வரவு – செலவு சமர்பிக்கப்படும்.
இப்படிக்கு
அமைப்புத் தலைமை
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
98841-32651