நியுசிலாந்து நாட்டின் க்ரிஸ்ட் சர்ச் என்ற நகரத்திலுள்ள இரண்டு பள்ளிவாசல்களில் இன்று (15-03-2019) வெள்ளிக்கிழமை தொழுகைக்காக சென்றிருந்த முஸ்லிம்கள் மீது தீவிரவாதிகள் தூப்பாக்கி சுடு நடத்தியுள்ளனர். இத்தூப்பாக்கிச் சூட்டில் இதுவரை 49 பேர் மரணித்துள்ளதாகவும் பலரும் உயிருக்கு போராடி வருவதாக செய்தி வந்துள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் அடுத்த அறிவிப்பு வரும் வரை காலவரையரையின்றி மூட நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளது.
இத்தாக்குதலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒர் பயங்கரவாதி ஈடுபட்டுள்ளதாக ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மேரிசன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜஸிந்தா அர்தர்ன் இத்தாக்குதலை வன்மையாக கண்டித்து இது நாட்டின் இருண்ட மணி துளிகள் என கூறி உடனே தாக்குதல் நடந்த நகரத்திற்கு சென்று பார்வையிட இருப்பதாகவும் கூறியிருப்பது ஒர் பொறுப்புள்ள பிரதமர் என்பதனை உணர்த்துகிறது.
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் இத்தாக்குதலை வண்மையாக கண்டிப்பதோடு . தீவிரவாதம் என்பது எந்த ஒர் மதத்திற்கோ , இனத்திற்கோ சொந்தமல்ல என்பதனை நினைவுறுத்துகிறோம். தீவிரவாதம் என்பது மனித குலத்திற்கு எதிரானது. ஆகையால் இத்தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து சுட்டு தள்ள வேண்டும் எனவும் நாட்டிலுள்ள முஸ்லிம்களின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கேட்டு கொள்கிறது.
இப்படிக்கு
முஹம்மது சுல்தான்
பொதுச் செயலாளர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
98841-32651