தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2020 விண்ணப்பித்தல் முறை & கட்டணமில்லா பயிற்சி

தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்போர் (ஆண்கள் மட்டும்) பதவிகளுக்கான 10906 பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடைபெறவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு முடித்து இருந்தால் போதுமானது.
தமிழகத்தில் மொத்த காவல் துறையின் எண்ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரம்.இதில் 2015 கணக்கின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை 1900.ஏறக்குறைய 1.7 % மட்டும் தான். 2006 இல் இடஒதுக்கீடு கிடைத்தும் கூட முஸ்லிம் சமூகத்தில் விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் நமக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை இன்னமும் பூர்த்தி செய்ய இயலவில்லை. தற்போது நடைபெறும் இந்த தேர்வில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு 3.5 % அடிப்படையில் சுமார் 380 இடங்கள் முஸ்லிம்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. 
இந்த தேர்வில் மாணவர்கள் பயிற்சி பெற்று வெற்றி பெற தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் தகுதியான மாணவர்களுக்கு 45 நாட்கள் எழுத்துத்தேர்வு மற்றும் உடற்பயிற்சிக்கான முதல் கட்ட வகுப்புகள் வரும் அக்டோபர் 15 ம் தேதி அன்று முதல் துவங்க உள்ளன.  வகுப்பிற்கான தகுதிகளை பூர்த்தி செய்யும் மானவர்களின் பயிற்சி உணவு தங்குமிடம் இவற்றுக்கு கட்டணம் கிடையாது. இதற்க்காக விண்ணபிக்க 9789234073 என்ற எண்ணில் வாட்ஸ் அப் அல்லது SMS செய்யவும்.
மேலும் உங்கள் பகுதியிலுள்ள தகுதியான மாணவர்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமூட்டி பயிற்சியில் கலந்து கொள்ள செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பித்தல் முறைபற்றிய விளக்க வீடியோ https://youtu.be/kOIGCsL0lP8
இணைய வழி விண்ணப்பம் பதிவேற்றம் தொடங்கிய நாள் 26.09.2020. விண்ணப்பம் பதிவேற்ற இறுதி நாள் 26.10.2020 (பிற்பகல் 12 மணி வரை). மேலும் விவரங்களுக்கு: www.tnusrbonline.org

அறிவிப்பு https://onlineymj.com/wp-content/uploads/2020/09/CR_2020_Notification.pdf

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *