கோவையில் 7 வயது சிறுமி சடலமாக மீட்பு – ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கண்டனம்
சதீஷ் – வனிதா என்கிற தம்பதியினர் கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்விறு தம்பதியினருக்கும் 7 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.

(25.03.19) திங்கட்கிழமை மாலை முதல் அச்சிறுமியை காணவில்லை.
இந்நிலையில் (26.03.19) அன்று செவ்வாய் கிழமை காலை தனது வீட்டின் அருகேயே கை, கால்கள் கட்டப்பட்டும் வாயில் துணி வைத்த நிலையிலும் இரத்த வெள்ளத்தில் அச்சிறுமி சடலமாக மீட்கபட்டு இருக்கிறாள்.
இந்நிகழ்வை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
விவரம் புரியும் வயதில் காதல் வலையில் விழுந்து மானத்தை பறிகொடுத்த பொள்ளாச்சி நிகழ்வின் தாக்கமே இன்னும் தணியவில்லை…!! எனும்போது விவரம் அறியா பச்சிளம் குழந்தை என்ன பாவம் செய்தது…??
“இந்தியா” பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு என்பதை கணக்கெடுப்பை காட்டியெல்லாம் நிரூபிக்க தேவையில்லை. ஒருமுறை செய்தித்தாளை புரட்டிப் பார்த்தாலே போதும்.
இந்நிலை மாற “இஸ்லாமிய சட்டத்தை” அமல்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உடனடியாக கண்டறிந்து தயவு தாட்சணையின்றி “மரண தண்டனை” கொடுக்க வேண்டும் என்று ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மேலும் இதுபோன்ற அபாயச் சூழ்நிலை நாடெங்கும் பரவி காணப்படுவதால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை கண்ணும் கருத்துமாக தங்கள் பார்வையின் கீழ் பாதுகாப்பாக கண்காணித்து வளர்க்குமாறு ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
இப்படிக்கு
முஹம்மது சுல்தான்
பொதுச் செயலாளர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்