நேற்று முன் தினம் (7-07-2019) இரவு கோவை குனியமுத்தூர் வெத்தலக்கார வீதியில் பழவியாபாரம் செய்து வரும் ஜாபர் அரஃபாத் என்ற அப்பாவி இளைஞர் சமூக விரோதிகளால் கடுமையாக தாக்கப்பட்டு தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இக்கொடூரத் தாக்குதலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் (YMJ) வன்மையாக கண்டிக்கிறது.
ஜாபர் அரஃபாத் தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு அவருடைய ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு கும்பல் அவரது வாகனத்தை இடைமறித்து கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் 8 நபர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் 5 நபர்களை காவல்துறை கைது செய்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த செயலை வரவேற்கிறோம்.
இதே வெத்திலைக்கார வீதியில் கடந்த 15-01-2018 அன்று உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த முகமது சுஹைல் என்ற 22 வயது இளைஞர் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்தார்.
வட இந்தியாவில் முஸ்லிம்களை ” ஜெய் ஸ்ரீராம்” சொல்ல கட்டாயப்படுத்தி அடித்து கொன்று குவித்து வரும் காவி கும்பல் தற்போது அரசியல் ஆதாயம் தேட அதே போன்ற சம்பவங்களை தமிழகத்திலும் அரங்கேற்ற முயற்ச்சித்து வருகிறது.
கோவையில் அமைதியாக மக்கள் சமூக மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வரும் இச்சூழலில் அதை கெடுக்கும் விதமாக இது போன்ற சம்பவங்கள் உள்ளன.
இந்த கொடூர கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும் மற்றும் இதன் பின்னனியுலுள்ள அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து தேசிய பாதுக்காப்பு பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என YMJ கேட்டு கொள்கிறது.
கடுமையான தண்டனையில்லாமல் வெறுமனே கண்துடைப்பாக குற்றவாளிகளை கைது செய்து அரசு செலவில் அவர்களுக்கு அனைத்து வசதிகளை செய்து தரும்பட்சத்தில் குற்றங்கள் அதிகரிக்குமே தவிர குறையாது என்பதனையும் கூறிக்கொள்கிறோம்.
மத்திய பாஜக வுடன் கூட்டு வைத்துள்ள தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் உடனடியாக இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில் மீண்டும் கோவை மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை உருவாகும்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் 2 பெண்கள் தற்க்காப்புக்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரி கடிதம் வழங்கியிருந்தனர். அரசு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்காதபட்சத்தில், சமூக விரோத காவி கும்பலிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ள அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமையின் அடிப்படையில் பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்வார்கள் என்பதனையும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் எச்சரிக்கிறது.
இப்படிக்கு
எம். முஹம்மது சுல்தான்
பொதுச்செயலாளர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
98841-32561

