கோபத்தை மென்று விழுங்குவோம்…!!!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பிற்கினிய சகோதரர்களே…!!!

எல்லா மனிதர்களிடத்திலும் பொதுவாக இருக்கும் பண்புகளில் ஒன்று தான் கோபம்…!!

கோபம் பல்வேறு தருணங்களில் தகுந்த சந்தர்ப்பங்களில் நமக்கு ஏற்ப்பட்டாலும், அதிகப்பட்சமாக அது தேவையற்ற சூழ்நிலைகளில் வந்து நம்மையும் பாதித்து பிறரையும் பாதிப்பதாகவே உள்ளது…!!

முஃமின்களின் பண்புகளை ஏக இறைவன் தன் திருமறைகளில் எடுத்துரைக்கும்போது…

الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنْ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ(134) سورة آل عمران

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன் 3:134)

ஆனால், தற்காலத்தில் கோபம் கொண்டு திரிபவரும், எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் கை ஓங்கும் பழக்கமுடையவரும் ஏதோ மிகப்பெரிய வீரரகாவே பார்க்கப்படுகிறார்கள்…!!

வீரர்களுக்கெல்லாம் வீரர் தான் உலக மக்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம்…!!

இவர்களையெல்லாம், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீரரே இல்லை என்று சொன்னது தான் வியப்பான விசயம்…!!

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الشَّدِيدُ بِالصُّرَعَةِ إِنَّمَا الشَّدِيدُ الَّذِي يَمْلِكُ نَفْسَهُ عِنْدَ الْغَضَبِ رواه البخاري

பிறரை விழ்த்துபவன் வீரன் அல்லன். கோபத்தில் தன்னை கட்டுபடுத்திக் கொள்பவனே (உண்மையில்) வீரனாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ (6114)

மேலும் உத்தம  நபி (ஸல்) அவர்கள்
கோபத்தை கட்டுப்படுத்துபவரை வீரர் என்று மட்டும் சொல்லாமல் அதை கடைப்பிடிப்பதற்கு சில வழிமுறைகளையும் சொல்லி தருகிறார்கள்…!!

عَنْ أَبِي ذَرٍّ، قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَنَا ‏ “‏ إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَإِلاَّ فَلْيَضْطَجِعْ ‏ رواه ابوداود

حكم الحديث : صحيع

 உங்களில் ஒருவருக்கு நிற்கும் போது கோபம் வந்தால் அமர்ந்து கொள்ளட்டும். அப்போதும் போகவில்லையானால் அவர் படுத்துக்கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர்(ரலி)

நூல் : அபூதாவூத் (4782) தரம் : ஸஹீஹ்

எப்படியாவது கோபத்தை கட்டுபடுத்திக்கொள்…!! என்பதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள்…!!!

மேலும், அதுவே அவர்களின் அடிப்படையான அறிவுரையாகவும் இருந்துள்ளது…!!

  عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْصِنِي قَالَ لَا تَغْضَبْ فَرَدَّدَ مِرَارًا قَالَ لَا تَغْضَبْر رواه البخاري

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம வந்து எனக்கு அறிவுரை கூறுங்கள்! என்றார். கோபப்படாதே! என்றார்கள். பல தடவை (எனக்கு அறிவுரை கூறுங்கள்! என) கேட்டபோதும் கோபப்படாதே! என்றே கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுஹுரைரா (ரலி)

நூல் : புகாரீ (6116)

இதையெல்லாம் விட சிலர் தன்னுடைய சோதனை காலங்களை எதிர்கொள்ள முடியாமல் பரிசோதிக்கும் படைப்பாளனின் மீதே கோபம் கொள்வார்கள்…!!!

அது எவ்வளவு கொடியது என்பதையும், அதற்கான தண்டனை எவ்வளவு கொடுமையானது என்பதையும் விளக்கும் வகையில் நபி யூனுஸ் (அலை) அவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு படிப்பினையாகவே அமைந்துள்ளது…!!

وَذَا النُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَنْ لَنْ نَقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنْ الظَّالِمِينَ(87)فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنْ الْغَمِّ وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ(88) سورة الأنبياء

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம் என்று நினைத்தார். “”உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகிவிட்டேன்” என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார். அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

(அல்குர்ஆன் 21:87,88)

கோபம் கொண்டு கோலையாக வாழாமல்,

கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு ஒரு வீரராக வாழ்வோம்..!!

கோபத்தை மென்று விழுங்கி…

நல்ல முஃமின்களாக வாழ்வோம்…!!

ஏக இறைவனிடத்தில் அதற்காக பிரார்த்திப்போம்…!!!

என்றும்
இறைப்பணியில்,

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
நாகை மாணவர் குழு

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *