இலங்கையில் கடந்த 21-04-2019 அன்று நடைபெற்ற தீவிரவாத தற்கொலைப் படை தாக்குதலில் 300 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து 500 க்கும் மேற்ப்பட்டோர் காயம் அடைந்து தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர்.
இத்தாக்குதலை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் வன்மையாக கண்டிப்பதோடு இந்த துயரத்தில் கிறித்துவர்களுடன் துனையாக நிற்போம் என்பதனை தெரிவிக்க இன்று (28-04–2019) திருச்சியில் எங்கள் அமைப்பை சேர்ந்த மாணவர்கள் கிறிந்துவ தேவலாயங்களுக்கு சென்று கிறித்துவ மக்களிடம் ஆறுதலை பகிர்ந்து கொண்டோம்.
இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மனித குலத்திற்க்கு எதிரானது மனிதாபிமனமுள்ள யாரும் இதை ஏற்ற கொள்ளம்மாட்டார்கள்.
இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஒர் குறிபிட்ட அமைப்பை சார்ந்த இஸ்லாமியர்கள் எனவும் இதில் ISIS தீவிரவாத அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது , இந்த கொடூர சம்பவத்தை யார் எந்த மதத்தை சார்ந்தவர்கள் செய்திருந்தாலும் அமைதியை விரும்பக்கூடிய மனித நேயமுள்ள யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.
ஆனால் இத்தாக்குதலை நடத்தியவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என ஊடகங்களால் பரப்பபடுகிறது, இஸ்லாத்தையும் இந்த சம்பவத்த்திதில் ஈடுப்பட்டவர்களை இணைப்பது தவறானது.
இஸ்லாமிய மார்க்கம் பயங்கரவாதத்தை போதிக்கவில்லை. திருகுர்ஆனின் போதனைப்படி “ யார் ஒர் மனிதனை அநியாயமாக கொலை செய்கின்றானோ அவன் உலக மக்கள் அனைவரையும் கொலை செய்தவர் போலாவார்” .
ஆக இத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உன்மை முஸ்லிமாக கருதப்படமாட்டார்கள். அதே போல் ISIS அமைப்பு இஸ்லாமிய அடிப்படைக்கு எதிரான அமைப்பு இதை முஸ்லிம்கள் யாரும் ஏற்று கொள்ளவில்லை. இவர்களை இஸ்லாமிய சமூகம் தனிமைப்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஈடுப்பட்டவர்க்ககளின் உடல்களை கூட. முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்யப்படாது என இலங்கையின் முஸ்லிம் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி கொண்டு ஒற்றுமையுடன் இருந்துவரும் கிறிஸ்துவ இஸ்லாமியர்களுக்கு மத்தியில் பிளவை ஏற்படுத்த சில விஷமிகள் ஈடுபட்டுள்ளனர். இவர்களை இரு சமூக மக்களும் இனம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு
ஐ. ஷேக்
மாவட்டத் தலைவர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
திருச்சி மாவட்டம்
98421-49834 / 99940 15171