இனிதே நிறைவுற்றது YMJவின் முதல் மாநில பொதுக்குழு

ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் முதல் அமைப்புப் பொதுக் குழு கூட்டம் இன்று (20-01-2019) திருப்பூர் காந்தி நகர் ரோட்டரி கிளப் மண்டபத்தில் கூடியது.

இதில் அமைப்பின் புதிய நிர்வாகம் தேர்தெடுக்கப்பட்டது.

தலைவர் – ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி
பொதுச் செயலாளர் : முஹம்மது சுல்தான்
பொருளாளர்: அப்துல் மாலிக்
துனைத் தலைவர் : சேப்பாக்கம் அப்துல்லாஹ்
துனை பொதுச் செயலாளர் : இமாம் அலி
இத்துடன் கீழ்கண்ட் 8 அமைப்பு செயலாளர்கள்
1. திருப்பூர் அப்துர் ரஹ்மான்
2. பத்ரூல் ஆலம்
3. நிசார் கபீர் M.Isc
4.மதுரவாயல் இஸ்மாயில்
5. குமரி அப்துர் ரஹ்மான்
6.போத்தனூர் நசீர் அஹமத்
7.தூத்துக்குடி அப்பாஸ்
8. கடலூர் அஷ்ரஃப்

இக்கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைப் பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. நேர்மையற்ற நோக்கத்தோடும், முரண்பட்ட விதிமுறைகளோடும் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
நாள் ஒன்றுக்கு நகர்ப்புறத்தில் 33 ரூபாய் சம்பாதிப்பவரும், கிராமப் புறத்தில் நாள் ஒன்றுக்கு 27 ரூபாய் சம்பாதிப்பவரும் வறுமையில் வாடும் ஏழை என்று மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
இந்த வகையினருக்கு இடஒதுக்கீடு என்று சொன்னால் கூட ஏழைகளுக்கு இடஒதுக்கீடு எனும் அரசின் சட்டத்தை ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் ஆண்டுக்கு எட்டு இலட்சம் ரூபாய் சம்பாதிப்பவர் அதாவது நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் சம்பாதிப்பவர், ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருப்பவர் அதுவும் மும்பை போன்ற பெருநகரங்களில் வைத்திருந்தால் அவர் மல்டி மில்லினியராகத் தான் இருப்பார். 1000 சதுர அடியில் வீடு கட்டியிருப்பவர் ஏழை என்றும் அந்த ஏழையை முன்னேற்ற 10 சதவீத இடஒதுக்கீடு என்பதும் அநீதத்தின் உச்சமாகும்.
ஓட்டுக்காக சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைக்கும் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

2. முஸ்லிம் பெண்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் முஸ்லிம் ஆண்களை சிறையிலும் முஸ்லிம் பெண்களை நடுத் தெருவிலும் நிற்க வைக்கும் மத்திய அரசின் முத்தலாக் தடைச் சட்டத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறி ஒரேயடியாக பிரிந்து விடும் விவாகரத்து முறை இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்டது இல்லை.
யாரேனும் ஒரே நேரத்தில் 3 தலாக் சொல்லி விவாகரத்து செய்தால் சட்டப்படி அது செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டால் முஸ்லிம் பெண்களையும் பாதுகாக்கலாம். முஸ்லிம் ஷரீஅத் சட்டத்தையும் நடைமுறைப்படுத்தி விடலாம். 
இதற்கு முன்னர் பல வழக்குகளில் உச்சநீதி மன்றம் இவ்வாறு தீர்ப்பளித்து நீதியை நிலை நாட்டியுள்ளது.
பிரச்சனையைத் தீர்க்க இவ்வளவு எளிதான வழிமுறை இருக்கும் போது அதை விட்டு விட்டு ஒரே நேரத்தில் முத்தலாக் சொன்னவரை மூன்றாண்டு சிறை அடைக்க வேண்டிய தேவை என்ன வந்தது?
விவாகரத்து செய்வதில் தவறிழைக்கும் எந்த மதத்தவருக்கும் சிறைத் தண்டனைக் கிடையாது. முஸ்லிம் தவறு செய்தால் மட்டும் சிறையிலடைப்போம் என்பது முஸ்லிம் குடும்பங்களைச் சீரழிப்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமேயன்றி இதை சட்டம் என்று அறிவுடைய எந்த மனிதரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்.
ஆயினும் இந்த விவகாரத்தில் எந்த வழக்குகளும் வராத வகையில் ஒவ்வொரு முஸ்லிம் ஜமாஅத்களிலும் இறைச் சட்டத்தை சரியாகக் கடைபிடித்து மத்திய பாஜக அரசின் முகத்தில் முஸ்லிம் நாங்கள் கரியைப் பூசுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

3. பிளாஸ்டிக் பயன்பாடு சுற்றுச் சூழலுக்குக் கேடு ஏற்படுத்துவதால் அதை ஒழிக்க வேண்டும் என்பதற்காக அரசு எடுத்து வரும் முயற்சிகள் வரவேற்கத்தக்கதே.
அந்த முயற்சிகள் அனைத்தும் சரியாகப் பயன் தர வேண்டுமென்றால் அவை எல்லாரிடத்திலும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் சிறுகுறு வியாபாரிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடைவிதித்து அவர்கள் நடுத்தெருவுக்கு வந்தாலும் சரி பிளாஸ்டிக்கை ஒழித்தே தீருவோம் என்று செயல்படும் அரசு, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பொருட்களுக்குப் பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு எந்தத் தடையும் விதிக்கவில்லை.
பிஸ்கட் பாக்கெட்கள், ஜங்ஃபுட் வகையறாக்கள், ஆயில் பாக்கெட்டுகள் என அனைத்து மேல்தட்டு தொழில்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு அப்படியே தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களை நடுத் தெருவுக்குக் கொண்டு வந்து விட்டு மேட்டுக்குடிகளின் மேனியில் தூசி கூட படாமல் பார்த்துக் கொள்ளும் இந்த அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
உடனடியாக இதற்கு உரிய மாற்றுத் தீர்வைக் கண்டறிந்து நடைமுறைக்குக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
முஹம்மது சுல்தான்
பொதுச் செயலாளர்
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *