ஸாலிஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே…!!
இறைவன் பல்வேறு சமூகங்களை தன்னை மறுத்த காரணத்திற்காக அழித்திருக்கிறான்…!!
அந்த வரலாற்று நிகழ்வுகளை ஒவ்வொன்றாக இத்தொடரில் பார்த்து வருகிறோம்…!!!
மேலும் நாம் இந்த இறைவசனங்களின் தொகுப்பை வேறுவகையில் ஒரு கட்டுரைக்கு ஏற்ப தொகுத்து எழுத முற்படும்போது அதில் சிலதை எழுதி சிலதை விடும் நிலை ஏற்பட்டது…!!
அவனது வசனங்களை மாற்றியமைத்து அதை விட எளிய முறையில் கொண்டுவர முடியுமா…!!
என்ன??
எனவே, நபி ஸாலிஹ்(அலை) அவர்களின் ஸமூது சமூகம் அழிக்கப்பட்ட வரலாற்றை இங்கு வசனங்களாகவே தொகுத்து வழங்கியிருக்கிறோம்…!!
இதை படித்து தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்குங்கள்…!!!
وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا ۚ قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَٰهٍ غَيْرُهُ ۖ هُوَ أَنشَأَكُم مِّنَ الْأَرْضِ وَاسْتَعْمَرَكُمْ فِيهَا فَاسْتَغْفِرُوهُ ثُمَّ تُوبُوا إِلَيْهِ ۚ إِنَّ رَبِّي قَرِيبٌ مُّجِيبٌ
ஸமூது சமுதாயத்திடம், அவர்களின் சகோதரர் ஸாலிஹை (அனுப்பினோம்). “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனன்றி வணக்கத்திற்குரியவன் உங்களுக்கு யாருமில்லை. அவனே உங்களைப் பூமியிலிருந்து படைத்தான். அதில் உங்களை வசிக்கச் செய்தான். எனவே அவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் அருகில் உள்ளவன்;49 பதிலளிப்பவன்” என்றார்.
قَالُوا يَا صَالِحُ قَدْ كُنتَ فِينَا مَرْجُوًّا قَبْلَ هَٰذَا ۖ أَتَنْهَانَا أَن نَّعْبُدَ مَا يَعْبُدُ آبَاؤُنَا وَإِنَّنَا لَفِي شَكٍّ مِّمَّا تَدْعُونَا إِلَيْهِ مُرِيبٍ
“ஸாலிஹே! இதற்கு முன் எங்களிடம் நம்பிக்கைக்குரியவராக இருந்தீர்! எங்கள் முன்னோர்கள் எதை வணங்கினார்களோ, அதை நாங்கள் வணங்குவதை விட்டும் எங்களைத் தடுக்கின்றீரா? நீர் எதற்கு எங்களை அழைக்கின்றீரோ அதில் பெரும் சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று அவர்கள் கூறினர்.
قَالَ يَا قَوْمِ أَرَأَيْتُمْ إِن كُنتُ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّي وَآتَانِي مِنْهُ رَحْمَةً فَمَن يَنصُرُنِي مِنَ اللَّهِ إِنْ عَصَيْتُهُ ۖ فَمَا تَزِيدُونَنِي غَيْرَ تَخْسِيرٍ
“என் சமுதாயமே! நான் எனது இறைவனிடமிருந்து பெற்ற சான்றுடன் இருந்து, அவன் எனக்கு அருளும் செய்திருக்க, அவனுக்கு நான் மாறுசெய்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? என்பதற்கு எனக்குப் பதில் சொல்லுங்கள்! அப்போது நட்டத்தையே எனக்கு அதிகமாக்குவீர்கள்” என்று அவர் கேட்டார்.
وَيَا قَوْمِ هَٰذِهِ نَاقَةُ اللَّهِ لَكُمْ آيَةً فَذَرُوهَا تَأْكُلْ فِي أَرْضِ اللَّهِ وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ قَرِيبٌ
“என் சமுதாயமே! உங்களுக்குச் சான்றாக இதோ அல்லாஹ்வின் ஒட்டகம். அல்லாஹ்வின் பூமியில் மேயுமாறு இதை விட்டு விடுங்கள்! இதற்கு எந்தத் தீங்கும் செய்யாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) சீக்கிரத்தில் உங்களுக்கு வேதனை ஏற்படும்” (என்றார்).
فَعَقَرُوهَا فَقَالَ تَمَتَّعُوا فِي دَارِكُمْ ثَلَاثَةَ أَيَّامٍ ۖ ذَٰلِكَ وَعْدٌ غَيْرُ مَكْذُوبٍ
அதை அவர்கள் அறுத்துக் கொன்றனர். “உங்கள் வீடுகளில் மூன்று நாட்கள் அனுபவியுங்கள்! இது பொய்யாகாத எச்சரிக்கை” என்று அவர் கூறினார்.
فَلَمَّا جَاءَ أَمْرُنَا نَجَّيْنَا صَالِحًا وَالَّذِينَ آمَنُوا مَعَهُ بِرَحْمَةٍ مِّنَّا وَمِنْ خِزْيِ يَوْمِئِذٍ ۗ إِنَّ رَبَّكَ هُوَ الْقَوِيُّ الْعَزِيزُ
நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும், அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் நமது அருளால் அன்றைய இழிவிலிருந்து காப்பாற்றினோம். உமது இறைவன் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
وَأَخَذَ الَّذِينَ ظَلَمُوا الصَّيْحَةُ فَأَصْبَحُوا فِي دِيَارِهِمْ جَاثِمِينَ
அநீதி இழைத்தவர்களைப் பெரும் சப்தம் தாக்கியது. காலையில் தமது வீடுகளில் வீழ்ந்து கிடந்தனர்.
كَأَن لَّمْ يَغْنَوْا فِيهَا ۗ أَلَا إِنَّ ثَمُودَ كَفَرُوا رَبَّهُمْ ۗ أَلَا بُعْدًا لِّثَمُودَ
அதில் அவர்கள் வசிக்காதோர் போல் ஆனார்கள். கவனத்தில் கொள்க! ஸமூது சமுதாயத்தினர், தமது இறைவனை மறுத்தனர். கவனத்தில் கொள்க! ஸமூது சமுதாயத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்.
திருக்குர்ஆன் 11 : 61 – 68
வரலாற்று அறிவை வளர்த்துக் கொள்வோம்…!!!
திருக்குர்ஆனோடு அதிக தொடர்பை ஏற்படுத்தி அதை பிறருக்கும் எடுத்துரைப்போம்…!!!
இன்ஷா அல்லாஹ்…!!!