ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் சார்பாக ஃபித்ரா தொகை ரூபாய் . 150/- என அறிவிப்பு செய்யப்பட்டுள்து.
இத்தொகை பெருவாரியான மக்களை கருத்தில் கொண்டு தோரயமாக நிர்ணயிக்கப்பட்ட தொகையாகும்.
மார்க்க அடிப்படையில் ஃபித்ரா என்பது ஒவ்வொரும் தான் உண்ணும் உணவைக் கொண்டு முடிவு செய்ய வேண்டியதாகும்.
ஆண், பெண், சிறியவர், பெரியவர், அடிமை, சுதந்திரமானவர் அனைவருக்காகவும் ஒரு ஸாவு அளவு பேரீச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு அளவு தீட்டாத கோதுமையைப் பெருநாள் தர்மமாக நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். அதை(ப் பெருநாள்) தொழுகைக்கு முன் கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி).நூல்: புஹாரி-1503.
மேற்கண்ட ஹதீஸின்படி ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரை கிலோ ( 2.5 கிலோ) எடை கொண்டதாகும்.
நீங்கள் உண்ணும் அரிசியின் விலையை கருத்தில் கொண்டு உங்கள் ஃபித்ரா தொகையை அதற்கேற்ப நீங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். நீங்கள் முடிவு செய்யும் தொகை மேலே நிர்ணயித்துள்ள தொகையை விட கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் அதன் படி உங்கள் ஃபித்ரா தொகையை வழங்குமாறு கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு
அமைப்புத் தலைமை ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் 98841-32651