அஸ்ஸலாமு அலைக்கும்
கஜா புயலில் பாதிப்பால் இன்னும் மீளாமல் உள்ள நிலையில் தற்போது.
தென்கிழக்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறி தமிழகத்தை கடக்க உள்ளதாக மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல இடங்களில் கோடை மழை பரவலாக பெய்து வரும் நிலையில், இந்திய பெருங்கடல் – வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயலாக மாறினால் அதற்கு ஃபனி (Cyclone Fani) என பெயரிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் நமது சகோதரர்கள் உங்கள் பகுதியில் முன்னெச்சரிக்கை பணிகளில் ஈடுபடுமாறு கேட்டு கொள்கிறோம்.
அதே போல் இந்த புயலின் பாதிப்புகளிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுவோம்.
புயல் வீசும் போது ஓதும் துஆ..!
اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா
வகைர மாபீ[F]ஹா வகைர மா உர்ஸிலத் பி(B]ஹி.
வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரிஹா
வஷர்ரி மா பீ[F]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B]ஹி
தமிழாக்கம் :
இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன்.
இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம்: முஸ்லிம் 1496
இப்படிக்கு
ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்
தொடர்புக்கு : 98841-32651 , 98848-58479 , 73388-77001